லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பிரபல நடிகை! லட்சக்கணக்கில் பணம், அபார்ஷன்? கொத்தாக யூடியூபரை அள்ளிய போலீஸ்
சென்னை: நடிகர்கள் பாலியல் புகார்களில் சிக்கி வருவது அதிகரித்தபடியே உள்ளது.. சென்னை கோயம்பேடு விடுதியில் அடைத்து வைத்து, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகியுடன் சேர்த்து துணை நடிகர் ஒருவரையும் போலீசார் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.. இந்நிலையில், பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து போலீசுக்கு போயிருப்பது பெரும் பரபரப்பை தந்து வருகிறது. இது குறித்த விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பீகாரை சேர்ந்த பிரபலமான யூடியூபர் மணி மெராஜ்.. இவர் போஜ்புரி மொழியில் காமெடியான வீடியோக்களை வெளியிட்டு, வெகு சீக்கிரத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்து கொண்டவர்..

நாளடைவில் இன்ஸ்டாகிராமிலும் மணி மெராஜ் பிரபலமானார்.. இதனால் இவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ்கள் உண்டு..
பிரபல நடிகை வந்தனா
அதேபோல அங்குள்ள பிரபல நடிகை வந்தனா. சோஷியல் மீடியாவிலும் பிரபலமானவர் நடிகை வந்தனா.. வண்ணு தி கிரேட் என்று அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக அழைப்பார்கள். அந்தவகையில், மணி மெராஜும் வந்தனாவும் ஆரம்பத்தில் நல்ல நட்புடன் பழகியிருக்கிறார்கள்.. கடந்த இரண்டரை வருடங்களாகவே காதலித்தும் வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், மணி மெராஜ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் கோடா போலீஸில் புகார் தந்துள்ளார் நடிகை வந்தனா.. அந்த புகாரில், "கூல் டிரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். பிறகு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார்..
மதம் மாற வற்புறுத்தல் - அபார்ஷன்
குறிப்பிட்ட மதத்திற்கு மாறும்படியும் என்னை கட்டாயப்படுத்துகிறார்.. நான் கர்ப்பமடைந்தபோது வலுக்கட்டாயமாக அபார்ஷன் செய்ய வைத்தார்.. என்னுடைய லட்சக்கணக்கான ரூபாயையும் மோசடி செய்துவிட்டார்..
அவரது முதல் திருமணம் பற்றி கேட்டதற்கு, என்னை அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கினார்.. எனவே, ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதையும் மறைத்து என்னை ஏமாற்றிய யூடியூபர் மணி மெராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நடிகையின் இந்த புகாரின் பேரில், உத்தரப்பிரதேச போலீசாரும், பீகார் மாநிலம் பாட்னாவுக்கு கிளம்பி சென்று, மணி மெராஜை அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர்.. அவரை காசியாபாத்திற்கு அழைத்து செல்ல கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துவிட்டால், யூடியூபரிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்
இதனிடையே, மணி மெராஜின் வக்கீல் சிவானந்த் பாரதி, நடிகை வந்தனா தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பேசும்போது, "இது பாலியல் வன்கொடுமை கிடையாது.. இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்தனர்.. பிரபலமான யூடியூபராக மணி மெராஜ் இருப்பதால், அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சதி வேலையாக இது இருக்கும். எனவே இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.
கல்யாணமானதை மறைத்து பழகி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பண மோசடியிலும் ஈடுபட்டதாக நடிகை அளித்த புகாரில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்துள்ளது. அத்துடன் இருவருமே சோஷியல் மீடியாவில் பிரபலம் என்பதால், இந்த விவகாரம் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications