பிரபல நடிகை கஸ்தூரி "அறிவாலயத்தில்" வீசிய வெடி.. "டக்குனு கார் வாங்கி குடுத்துட்டாரே கமல்.. என்னாச்சு
சென்னை: மகளிருக்கான உரிமைத்தொகையை பெறுவதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை திமுக அரசு விதித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், மிக முக்கிய கோரிக்கையை நடிகை கஸ்தூரி எழுப்பியிருக்கிறார்.. அதுவும் கமலிடம் எழுப்பியிருக்கிறார்.
கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனர் என்று அடையாளப்படுத்தப்பட்டதில் இருந்தே, ஷர்மிளாவின் பப்ளிசிட்டி சோஷியல் மீடியாவில் அதிகமாகி கொண்டே வந்தது..

கனிமொழி: அதிலும், எம்பி கனிமொழி இவருடைய பஸ்ஸில் ஏறிய அடுத்த செகண்டே, ஷர்மிளாவின் புகழ், உச்சத்துக்கு எகிற தொடங்கியது.. பஸ்ஸூக்குள் அப்போது நடந்த சம்பவமும், அதையொட்டி பறிபோன இவரது வேலையும், அதைதொடர்ந்து கிளம்பிய குற்றச்சாட்டுகளும், ஷர்மிளாவுக்கான பரபரப்பை அடுத்தடுத்து கிளப்பியது.
இப்படி அனலடிக்கும் விதமாக, ஷர்மிளா நியூஸ் வலம்வந்தபோதுதான், மநீம தலைவர் கமல் இந்த விஷயத்தில் என்ட்ரி தந்தார்.. ஷர்மிளாவை அழைத்து கார் பரிசாக கொடுக்கவும், தமிழக அரசியல் வரை ஷர்மிளா விவகாரம் பற்றிக்கொண்டு எரிந்தது..
கமல் உதவிய கார்: கமல் கார் கொடுத்தது ஒருபக்கம் என்றால், ஷர்மிளாவின் அப்பா தந்த பேட்டி, பல்வேறு விவாதங்களை கிளப்பிவிட்டது. கமல் எதுக்காக ஷர்மிளாவுக்கு மட்டும் உதவ வேண்டும்? கோவை என்பதால், அந்த தொகுதியை சேர்ந்தவருக்கு கமல் உதவுகிறாரா? என்ற கேள்விகளும் இணையத்தில் வெடித்து கிளம்பின.
அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி, ஷர்மிளாவுக்கு கார் டெலிவரியாகிவிட்டது.. அந்த காரின்போட்டோவும் வெளியாகிவிட்டது. உடனே நெட்டிசன்கள், அந்த காரின் விலை என்ன? கார் எந்த மாடல்? என்று கூகுளுக்குள் தேடி ஆரம்பித்துவிட்டார்கள்.. ஷர்மிளாவுக்கு மகேந்திரா நிறுவனத்தின் மராசோ என்ற மாடல் கார் தரப்பட்டுள்ளது.. எப்படியும் 15 லட்சம் ரூபாய் முதல் 17 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்.. இந்த காருக்கு மொத்த பணமும் கட்டிவிட்டார்களா? அதுவும் தெரியவில்லை..
இப்படிப்பட்ட சூழலில்தான், பிரபல நடிகையும், சமூக ஆர்வலரும், துணிச்சல்வாதியுமான, கஸ்தூரி ஒரு ட்வீட்டினை பதிவிட்டு, கமலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷர்மிளாக்கள்: "டக்குனு கார் வாங்கி குடுத்துட்டாரே கமல் ! Generous gesture. But எத்தனை எத்தனை ஷர்மிளாக்கள் இங்கு. எல்லோருக்கும் கார் வேண்டாம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகைக்கு வழியில்லை. தன் தோழமை கட்சி அரசுக்கு எடுத்து கூறுவாரா மய்யத்தலைவர்?" என்ற கோரிக்கையுடன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன.. ஆனால் இந்த உரிமை தொகையை யார் யார் பெறமுடியும் என்ற கட்டுப்பாடுகள்தான் மிகுந்த அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.. மொத்தம் 12 கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சிகள் இதுகுறித்த விமர்சனங்களை திமுக மீது வீசி வருகிறார்கள்.

கஸ்தூரி சபாஷ்: ஆனால், கஸ்தூரியோ திமுக பக்கம் போகாமல், கமலை சீண்டி, ட்வீட் போட்டு பதிவிட்டுள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. அத்துடன், அனைவருக்கும் அந்த திட்டம் பயன் அளிக்கும் வகையில் திமுகவுக்கு எடுத்து சொல்லுமாறு கமலிடம் கஸ்தூரி கேட்டுள்ளது, "தகுதிவாய்ந்த" பெண்களையும் தாண்டி, ஒட்டுமொத்த பெண்களின் கோரிக்கையாகவும் கருதப்பட்டு வருகிறது..!!
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications