லுங்கி + அங்கி + சங்கி.. பாலுமகேந்திராவின் மாணவன்.. பிரபல டைரக்டர் சீனு ராமசாமி நறுக்.. குஷியில் பாஜக
சென்னை: பிரபல தமிழ் டைரக்டர் சீனு ராமசாமியின் ட்விட்டர் களமே படுபிஸியாக காணப்படுகிறது.. ஆதரவும், எதிர்ப்பும் என கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
புதிய நாடாளுமன்றத்தை, நம் நாட்டின் மிக உயரிய அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்முவே திறந்து வைக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி அதை திறக்கக்கூடாது என்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
திறப்பு விழா: மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கே மத்திய அரசு அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியதுடன், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையும், 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.. அத்துடன், பாஜக அரசையும் பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

மற்றொருபுறம், தமிழகத்தின் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதற்கு பலரும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.. அந்த வகையில் பிரபல டைரக்டர் சீனு ராமசாமியும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.
ட்வீட்: அந்த ட்வீட்டில், "தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர்கள், இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்துள்ளீர் பெரிய விஷயம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்ததும் பலருக்கு அதிர்ச்சியாகிவிட்டது.. நாட்டின் முதல் குடிமகளை ஒதுக்கிவிட்டு விழாவை நடத்தியிருக்கிறார்கள்.. அதை கண்டிக்காமல், இப்படி பாராட்டுகிறீர்களே? நீங்களும் சங்கியா? என்றெல்லாம் விமர்சித்து இணையவாசிகள் கமெண்ட்களை தெறிக்க விட்டனர்.. இந்த கமெண்ட்களுக்கெல்லாம் சீனு ராமசாமியே பொறுமையாக பதில் கமெண்ட் பதிவிட்டார்..
நான் சங்கியுமல்ல
— Seenu Ramasamy (@seenuramasamy) May 30, 2023
அங்கியுமல்ல
லுங்கியுமல்ல
டர்பன்னும் அல்ல
நீலவான் அல்ல
மேலும்
தமிழ் தேசியம்
திராவிடம்
இன்னபிற ஜாதியம்
இப்படி
எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன்.
"எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே
நந்தனை… https://t.co/4SJbsQ7GN4
அதிர்ச்சி : தன் நிலைப்பாட்டையும் சொன்னார்.. தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகமாகவும், மறுபடியும் ஒரு ட்வீட்டினை பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்தான் இணையத்தில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
"நான் சங்கியுமல்ல
அங்கியுமல்ல
லுங்கியுமல்ல
டர்பன்னும் அல்ல
நீலவான் அல்ல
மேலும்
தமிழ் தேசியம்
திராவிடம்
இன்னபிற ஜாதியம்
இப்படி
எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன்.
"எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே
நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்" என எழுதி
வள்ளுவத்துக்கு
விளக்கவுரை தந்து
வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன்.
யதார்த்த
கலைச்சிற்பி பாலுமகேந்திரனின்
பள்ளியின் கடைசி இருக்கை மாணவன்.
மக்கள் திலகத்தின் வள்ளல் குணத்தை போற்றுபவன்
கிருபானந்த வாரியின் தமிழ் மாணக்கன்.
தமிழ் மொழிக்கு புகழ் செய்வோரை வாழ்த்துபவன்.
நம்
பாரத பிரதமருக்கு பலர் சொன்ன
பிறந்த நாள் வாழ்த்துப் போல்
நீதி வழுவாத தமிழ்
'செங்கோல்'
தமிழ் ஓதுவார்கள்
மரியாதை செய்யப்பட்டதை வாழ்த்தினேன்.
தமிழ் நாட்டில்
மூலஸ்தானத்துள் செல்ல முடியாத ஓதுவார்கள் புதிய
பாராளுமன்றத்தில்
போவதும் எனக்கு முக்கியமாகப் பட்டது.
மீண்டும் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு அன்பு நன்றி வாழ்த்துகள்"... என்று பதிவிட்டுள்ளார்.
சீனு ராமசாமி, மறுபடியும் பிரதமருக்கு வாழ்த்தை சொல்லவும், நெட்டிசன்கள் மறுபடியும் பிஸியாகிவிட்டார்கள்.. திரண்டு சென்று, எதிர்கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..!!!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications