போதை ஊசி.. பணமோசடி.. பிரிந்த இன்ஸ்ட்டா பிரபல ஜோடி.. "தேச ராணி" தந்த ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த காதல் ஜோடிகளான தேசராணி - ஹரி ஜோடி பிரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையில் கிடைக்கும் போதை ஊசி பழக்கம் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளதால் விரைவில் இதில் போலீசார் ஆக்சன் எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் டோரா புஜ்ஜி என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் ஜோடி - தேசராணி - ஹரி ஜோடி. இதில் இரண்டு பேருமே பெண்கள்தான். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்கள்.. காதலில் விழுந்து ஒன்றாக வீடியோ போட தொடங்கினர். இதில் ஹரி.. ஆண் போல வேடம் அணிந்து தொடர்ந்து தேச ராணி உடன் சேர்ந்து வீடியோ போட்டு வந்தார்.

சர்ச்சை: இவர்கள் தன்பாலின ஜோடி என்பதால்.. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்தனர். இவர்களை எதிர்க்கும், ஆதரிக்கும் குழு என்று பலர் தொடர்ந்து இவர்களை டிரெண்ட் செய்து வந்தனர்.

முக்கியமாக தேசராணி பேட்டி ஒன்றில்.. நான் பல ஆண்களை காதலித்து இருக்கிறேன். ஆனால் ஆண்கள் எல்லோரும் என்னை ஏமாற்றிவிட்டனர். ஆனால் ஹரி அப்படி இல்லை. ஆண்கள் எல்லோருமே என்னை ஏமாற்றித்தான் பார்த்து இருக்கிறேன். ஹரி அப்படி இல்லை.

அவர் மட்டுமே என்னை புரிந்து கொண்ட நபர். அவரை போன்றவருடன்தான் நான் இருப்பேன். ஆண்களுடன் எனக்கு செட் ஆகாது என்றெல்லாம் பேட்டி கொடுத்து இருந்தார்.

Famous Instagram couple Dora Bujii over the drug abuse of one of the person

ஏமாற்றி விட்டார்: காதல் ஜோடிகளான தேசராணி - ஹரி ஜோடி பிரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையில் கிடைக்கும் போதை ஊசி பழக்கம் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளதால் விரைவில் இதில் போலீசார் ஆக்சன் எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை தேசராணி வெளியிட்டுள்ளார். அதில்.. ஹரி என்னை ஏமாற்றிவிட்டார். அவர் போதை ஊசிக்கு அடிமையாகி விட்டார். எனக்கு தெரியாமல் போதை ஊசி பழக்கம் அவருக்கு வந்துவிட்டது. இடையில் இதை கண்டுபிடித்து அவரை கண்டித்தேன்.

சில நாட்கள் நன்றாக இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் என்னை ஏமாற்றி.. மீண்டும் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். அவர் போதை ஊசி போடும் போது அதை நான் நேரில் பார்த்தேன். அவரை மன்னிக்கவே மாட்டேன்.

பணமோசடி: அதோடு அவர் பணமோசடியும் செய்துள்ளார். பலரை ஏமாற்றி உள்ளார் . இன்ஸ்ட்டாகிராமில் ப்ரோமோஷன் செய்கிறேன் என்று கூறி பலரிடம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் அதை என்னிடமும் கொடுக்கவில்லை. ப்ரோமோஷனும் செய்யவில்லை. வெறுமனவே அவர் பணத்தை செலவு செய்து ஏமாற்றி உள்ளார்.

( இன்ஸ்ட்டா காதலனுடன் பைக் ரேஸ்! விபத்தில் காதலி பலி! சாலையிலேயே போட்டு விட்டு தப்பியோடிய )

என் அம்மா நான் பிரபலமாக இருப்பதால் 5 லட்சம் ரூபாயை கார் வாங்க கொடுத்தார். அவர் மீன் விற்பனைத்தான் செய்கிறார். ஆனால் அப்படியும் காசு சேர்த்து எனக்காக கார் வாங்க 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அதிலும் கூட 3 லட்சம் ரூபாயை மட்டும் கார் வாங்க பயன்படுத்திக்கொண்டு.. மீதம் உள்ள 2 லட்சம் ரூபாயை ஹரி ஏமாற்றிவிட்டார்.,

பழக்கம்: அவருக்கு போதை பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டது. அதோடு இல்லாமல் பலரை ஏமாற்றி உள்ளார். அவர் ஏமாற்றியவர்கள் இப்போது என்னிடம் காசு கேட்டு தொல்லை செய்கின்றனர் என்று கூறியுள்ளார் டோரா என்னும் தேசராணி.

இந்த விவகாரத்தில் சென்னையில் கிடைக்கும் போதை ஊசி பழக்கம் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளதால் விரைவில் இதில் போலீசார் ஆக்சன் எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+