"ஐயோ அங்கிள்".. ஏம்மா இப்படி பந்தா பண்ற? கங்கை அமரன் டென்ஷன்.. "கட்சி வளர UNCLE".. அட யார்னு பாருங்க
கங்கை அமரன் காயத்ரி ரகுராம் ட்வீட்டுக்கு பதிலடி தந்து முக்கிய அட்வைஸ் ஒன்றையும் செய்துள்ளார்
சென்னை: தினமும் ட்வீட்களை பதிவிட்டு, தமிழக பாஜகவை காயத்ரி ரகுராம் விமர்சித்து கொண்டுவருகிறார்.. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், டைரக்டருமான கங்கை அமரன், காயத்ரிக்கு அட்வைஸ் தந்துள்ளார்.
பாஜகவில் இருந்து வெளியேறியதில் இருந்தே, மாநில தலைமையை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.. அக்கட்சியின் நிர்வாகிகள் மீதும், கட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியே இருக்கிறார்.
அந்தவகையில், சமீபத்தில் பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியது குறித்தும் காயத்ரி ட்விட் பதிவிட்டிருந்தார்..

கங்கைஅமரன்
அதேபோல, பாஜக சார்பாக தமிழ்நாட்டில் 10 புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டதை காயத்ரி விமர்சனம் செய்துள்ளார். அதில், 10 மாவட்டங்களில் பாஜக கட்டிடங்கள்... தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள்.. மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

கங்கை அமரன்
இந்த ட்வீட்டுக்கு பிரபல இசையமைப்பாளரும், இயக்குனரும், பாஜக ஆதரவாளருமான கங்கை அமரன், கடுப்பாகி பதிலடி தந்துள்ளார்."ஏம்மா? நீதான் கட்சிய பாடுபட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே.. நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத. இது நான் உங்கப்பாவோட ஒண்ணா வளர்ந்த உன் சித்தப்பாங்கற முறையில சொல்றேன்" என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

ஐயோ uncle
உடனே இதற்கு காயத்ரி ரகுராம், "ஐயோ uncle நான் கட்சியை வளர்க்கவில்லை. என்னால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சி நமக்குள் வளர வேண்டும். ஆனால் அது என்னைப் பொறுத்தவரை வளரத் தவறிவிட்டது. அதனால் தான் கட்சியை விட்டு வெளியேறினேன். நான் நல்ல இயக்குனராகவும் இல்லை, நான் பந்தா செய்ய பெரிய பிரபலம் இல்லை. நான் என் தந்தையைப் போல ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நல்ல உள்ளம் என்னிடம் உள்ளது. அதே வழியில் நான் மக்களுக்கு உதவி செய்து பாதுகாத்தால் .. இது நான் நிறைவேற்றினால் அது எனக்கு மிகப்பெரிய சாதனை.

UNCLE
I'm no one but I will be voice of many. அது அப்பா மீதான வாக்குறுதி. தயவு செய்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் uncle.நான் என் தந்தையைப் போல இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நான் என்ன செய்கிறேனோ அது சுத்தமாகவும் உண்மையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அதுவே என் விருப்பம். எந்தத் துறையாக இருந்தாலும் என் தந்தை ஒரு தலைவராகப் பார்த்து வளர்ந்தேன். தங்க ஆன்மா.. உங்களுக்கு தெரியும் uncle" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications