Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல அரசியல்வாதி ஹோட்டலில் நடிகையுடன் உல்லாசம்? இளம் பெண்ணையும் விடல.. கோர்ட் பரபர தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு விவகாரத்தில், தற்போது ஒரு முக்கியத் தீர்ப்பு வந்துள்ளது. பாலக்காடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ராகுல் மன்கூட்டத்தில் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரில், இந்த தீர்ப்பு வந்துள்ளது.. என்ன நடந்தது? யாரிந்த எம்எல்ஏ?

திருவனந்தபுரம்: பாலக்காடு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ராகுல் மன்கூட்டத்தில்... இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பை வகித்தவர்.

Famous Politician invited actress

பாலக்காடு எம்எல்ஏ ராகுல்

ஆனால் பொறுப்புகள் அதிகமாக கிடைக்க கிடைக்க, ராகுல் மீதான பாலியல் புகார்களும் வெடித்து கொண்டு கிளம்பின.. சில மாதங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகையான ரினி ஆன் ஜார்ஜ், தன்னை ஒரு இளம் எம்எல்ஏ உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு அழைத்ததாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த இளம் எம்எல்ஏ யார் என்று நடிகை சொல்லாவிட்டாலும் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மன்கூட்டத்தில்தான் அந்த நபர் என்று கேரளாவில் பரவலாக சலசலக்கப்பட்டது.

ஆபாச சாட்டிங்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் ராகுல் மன்கூட்டத்தில் எம்எல்ஏ நடத்திய ஆபாச சாட்டிங் விவரங்கள் இணையத்தில் வெளியானது. அத்துடன் அந்த இளம்பெண்ணை அபார்ஷன் செய்வதற்கு எம்எல்ஏ மிரட்டும் ஆடியோவும் வெளியானது...

ஆனால் இது தொடர்பாக அந்த இளம்பெண் புகார் எதுவும் செய்யவில்லை. அதனால் போலீசாரும்எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை... அந்த இளம்பெண் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராகுல் மன்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கொடுத்தார்.

அபார்ஷன் - புகார்

பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் ஒன்றை அளித்தார். அதில், ராகுல் தன்னுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக பழகியதாகவும், அந்தப் பழக்கத்தை பயன்படுத்தித் தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் கர்ப்பமானபோது கட்டாயப்படுத்தித் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது தனிப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகார்கள் கேரள அரசியலில் ராகுல் மாம்கூட்டத்திலுக்குப் பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. திருவனந்தபுரம் வலியமலை போலீசார் இந்த விவகாரத்தில் அதிரடியாக களமிறங்கினார்கள்.. ராகுல் மன்கூட்டத்தில் மீது பலாத்காரம் மற்றும் மிரட்டி கருச்சிதைவு செய்ய வைத்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்...

சுற்றி வளைத்து கைது

ஆனால் இளம்பெண் பினராயை புகார் கொடுக்க சென்றதுமே, எம்எல்ஏ எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவர் எங்கே தலைமறைவாகிவிட்டார் என்று தெரியாமல், அவரை போலீசார் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேடினார்கள்...

இறுதியில் பாலக்காடு விடுதியில் தங்கியிருந்த ராகுல் மன்கூடத்திலை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரை பத்தனம்திட்டாவில் உள்ள ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். அதாவது ராகுல் மன்கூட்டத்தில் மீது பதிவு செய்யப்பட்ட மூன்றாவது பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை காவல்துறையினர் அப்போது மேற்கொண்டிருந்தனர்.

முன்ஜாமீன் தள்ளுபடி

இதற்கிடையே ராகுல் மன்கூட்டத்தில் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நசீரா, ராகுல் மன்கூட்டத்திலின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பிறகு ஹைகோர்ட்டை நாடினார் ராகுல்.. அப்போது ராகுல் தரப்பு நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வாதத்தை முன்வைத்தது. "இருவருக்கும் இடையிலான பழக்கம் என்பது ஒருவருக்கொருவர் விருப்பப்பட்டு ஏற்படுத்திக்கொண்டது. இதில் எந்தக் கட்டாயமும் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவும், ராகுலின் நற்பெயரை கெடுப்பதற்காகவும் இந்தப் பெண் இப்போது இப்படி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார்" என்று ராகுல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கவுசர் எடப்பகத், இருவருக்கும் இடையே பரிமாறப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தார். அந்த உரையாடல்களில் அவர்கள் இருவரும் சம்மதத்துடனேயே பழகியதும், கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் இருவரும் இணைந்து முடிவெடுத்தது போன்ற ஆதாரங்களும் இருந்ததாக தெரிகிறது.

ஏகப்பட்ட கண்டிஷன்

இதன் அடிப்படையில், "சம்மதத்துடன் கூடிய உறவில் விரிசல் ஏற்படும்போது, அதைப் பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது" என்ற கருத்தை நீதிமன்றம் முன்வைத்தது. அத்துடன் உயர் நீதிமன்றம் முன்ஜாமீனும் அவருக்கு வழங்கியுள்ளது.

இதன் மூலம் போலீசார் ராகுலை கைது செய்ய முடியாது. இருந்தாலும், நீதிமன்றம் சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது ராகுல் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்குத் தேவையான போது நேரில் ஆஜராக வேண்டும் மற்றும் தனது செல்போனை சோதனையிட ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் ராகுல் மன்கூட்டத்தில் மீது இது போன்ற வேறு சில புகார்களும் இருக்கத்தான் செய்கின்றன.. எனினும் இந்த முன்ஜாமீன் எம்எல்ஏவுக்கு ஒரு தற்காலிக நிம்மதியை தந்துள்ளதாகவே கருதப்படுகிறது....!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+