பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதியா? அவரது மகன் விஜய் மறுப்பு
சென்னை: பிரபல பாடகர் யேசுதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் பொய் என்றும், யேசுதாஸ் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துளளார்.
"கந்தவர்க் குரலோன்" என்று அன்போடு அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவருக்கு வயது 85 ஆகிறது.. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் 80000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியவர். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார்.

தமிழில் "பொம்மை" என்ற படத்தில் தன்னுடைய முதல் பாடலை அறிமுகமானார்... இதைத்தொடர்ந்து 80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, என எண்ணற்ற இசையமைப்பாளர்களின் இசையில் யேசுதாஸ் பாடிய அத்தனை பாடல்களும் ரசிகர்களால் காலத்துக்கும் மறக்க முடியாதவை. இவர் குரலில் உருவான "அரிவராசனம்" என்ற பக்தி பாடல் கேரளா மாநிலத்தில் சபரிமலை சன்னிதானத்தின் நடை திறப்பு மற்றும் சன்னிதான நடை சாத்தும் நேரங்களில் பாடப்படுவது தனிப்பெரும் சிறப்பு பெற்றவையாகும்..
இந்த நிலையில், யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை வருத்தமடையச் செய்து வருகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், யேசுதாஸ் நலமாக இருக்கிறார் என்றும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, பலரும் யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
"என்னுடைய அப்பா தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.. அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications