பிரபல ஸ்ரீகிருஷ்ணா பவன் ஓட்டலில் இப்படியா? ஹோட்டலுக்குள் நுழைந்த இஸ்லாமிய பெண் தந்த பரபரப்பு புகார்
சென்னை: பிரபல ஸ்ரீகிருஷ்ணா பவன் ஓட்டலில், சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக, இளம்பெண் ஒருவர் பகிரங்கமாகவே புகார் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது?
தமிழகத்தில் பிரபலமான முன்னணி ஓட்டல்களில் ஒன்று கிருஷ்ணா பவன்.. இந்த ஓட்டலின் சுவைக்கும், தரத்துக்கும், ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.. இதனால், பல ஊர்களிலும், கிருஷ்ணா பவனின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீ கிருஷ்ணா பவன் ஓட்டலுக்கு நபீஸா என்ற இஸ்லாமிய பெண், தன்னுடைய கணவன், 2 வயது மகன் மற்றும் மாமியாருடன் நேற்றிரவு சென்றிருக்கிறார்..
கஸ்டமர்கள்: அப்போது ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமானோர் அங்கே காத்திருந்தார்கள்.. ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம். நபீஸாவும் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கையை ரிசர்வ் செய்ய பெயர் கொடுக்க போனார்.
ஆனால் அந்த ஓட்டலின் மேனேஜர், நபீஸா தந்த பெயர்களை குறித்துக் கொள்ளவில்லையாம்.. அங்கு ஏற்கனவே காக்க வைக்கப்பட்ட அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்டனரே தவிர, நபீஸா குடும்பத்தினரை மட்டும் அங்கேயே காத்திருக்க வைத்துள்ளார்கள்..
காலி இருக்கைகள்: எனவே, இதை பற்றி 2 முறை மேனேஜரிடம் கேட்டும்கூட அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம்... இத்தனைக்கும் சாப்பிட சென்றவர்கள் பலர், சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார்களாம். சீட்டுகளும் நிறைய காலியாகவே இருந்ததாம். அப்படியிருந்தும், ஒரு மணி நேரம் கழித்தே, அதுவும் நபீஸாவின் கணவர் சென்று கேட்ட பிறகு, இவர்களுக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது
அதைவிட கொடுமை, சாப்பாடு ஆர்டர் செய்தும், அதை கொண்டு வந்து தருவதற்கு 1 மணி நேரமாகிவிட்டதாம்.. இப்படி எங்களை காக்க வைக்கறீர்களே என்று மறுபடியும் மேனேஜரிடம் நபீஸா கேட்டதற்கு, அதையும் அவர் பொருட்படுத்தவில்லையாம். மேற்கண்ட இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் நபீஸா பகிரங்கமாகவே தன்னுடைய பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி: நபீஸா தன்னடைய பதிவில், "பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதில் எல்லாம் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை.. ஆனால் அதை என்னுடைய வாழ்நாளில் சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை என்றும் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்றும் வெளிப்படையாக தன்னுடைய பதிவில் குற்றம் சாட்டியிருக்கிறார். நபீஸாவின் இந்த பதிவுதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications