பாடகர் வேல்முருகன் குடிபோதையில் கலாட்டா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. வீடியோ வேற வந்திருச்சே?
சென்னை: பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது?
சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற "மதுரை குலுங்க" என்ற பாடல் மூலமாக பாடகராக அறிமுகம் ஆனவர் வேல்முருகன்.. இதற்கு பிறகு, நாடோடிகள், ஆடுகளம் போன்ற அடுத்தடுத்த வந்த படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

வேல்முருகன்: வரிசையாக வந்த பாடல் வாய்ப்புகளை, தன்னுடைய வளமான குரலால், சரியாக பயன்படுத்தி கொண்டவர் வேல்முருகன்.. பிரத்யேகமான குரல் வளத்தினை பெற்றிருப்பதால், வேல்முருகனுக்கு மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் சேர்ந்தனர். இதற்கு பிறகு, டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் வேல்முருகன் பங்கெடுத்து வருகிறார். மற்றொருபக்கம் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
"பத்து மாசம் என்னை பெத்து எடுத்த அம்மா" என்ற பாடலை சமீபத்தில் வேல்முருகன் ஒரு மேடையில் பாடவும், கரூர் எஸ்பி-யின் அம்மா, வேல்முருகனின் பாட்டை கேட்டதுமே குலுங்கி குலுங்கி அழ துவங்கிவிட்டார்.
கதறி அழுகை: மேடையிலிருந்து இதை பார்த்த வேல்முருகன் வேகவேகமாக கீழே இறங்கி வந்து, அந்தம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டே அந்த பாடலை பாட துவங்கினார்.. வேல்முருகன் பாட பாட, அந்தம்மா கதறி கதறி அழ.. ஒட்டுமொத்த அரங்கமே விக்கித்து போனது. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை விமான நிலையத்தில் வேல்முருகன் அங்கிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேல்முருகன் திருச்சி செல்ல வேண்டியிருந்ததால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்..
மதுபோதை: அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அவரை, வழக்கமான சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாடகர் வேல்முருகன் மதுபோதையில் இருந்தது தெரியவந்திருக்கிறது.
அதனால், பாதுகாப்பு படை வீரர்கள் சம்மந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் அளித்திருக்கிறார்கள். அத்துடன் வேல்முருகன் மதுபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்..
மன்னிப்பு: இறுதியில், வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம். அதற்கு பிறகே, பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. விமான நிலையத்தில் வேல்முருகன் மதுபோதையில் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாகவும், போட்டோவாகவும் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications