‛‛மிஸ் யூ கேப்டன்’’.. விஜயகாந்த் இறுதி சடங்களில் நெகிழ்ச்சி.. செல்போனில் டார்ச்லைட் அடித்து அஞ்சலி
சென்னை: சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாத நிலையில் அலுவலகத்துக்கு வெளியே விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் தங்களின் செல்போனில் டார்ச்லைட் அடித்து அஞ்சலி செலுத்தியது நெகிழ வைத்தது.
நடிகராக இருந்து அரசியல் வாதியாக மாறியவர் விஜயகாந்த். தேமுதிக கட்சியை தொடங்கி எம்எல்ஏ, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தவர். நடிகராக இருந்தபோதும் அரசியல்வாதியாக மாறியபோதும் கூட விஜயகாந்த் எளியவர்களுக்கு உதவுவதை கைவிடவில்லை.

உதவி என்று கேட்டால் உடனே செய்யும் குணம் படைத்த விஜயகாந்தால் திரைத்துறை கலைஞர்களும், ஏழை மக்கள் என அதிகமானவர்கள் நன்மை பெற்றுள்ளனர். மேலும் மனிதர்கள் இடையே பாகுபாடு காட்டக்கூடாது. பசியோடு வருவோருக்கு வயிறு நிறைய உணவு அளிப்பதை தலையாய கொள்கையாக கொண்டு கடைசி மூச்சு வரை அதை பின்பற்றி வந்தவர் தான் இந்த கலியுக கர்ணன் விஜயகாந்த்.
உடல்நலக்குறைவால் அரசியல் மற்றும் சினிமா துறையில் இருந்து பல ஆண்டுகளாக விலகி இருந்தாலும் கூட அவருக்கென மக்கள் தங்களின் மனதில் கொடுத்த இடம் மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. இதற்கு சாட்சி தான் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கூடிய கூட்டம். உடல்நலக்குறைவால் நேற்று காலமான விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள், ஆளுநர்கள் ஆர்என் ரவி, தமிழிசை சவுந்தரராஜன், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என பலரும் நேற்றும், இன்றும் அஞ்சலி செலுத்தினர். மொத்தம் 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தி உள்ளதாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்பட பல தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று மாலை சுமார் 3 மணிக்கு விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் தொடங்கி சுமார் 3 மணிநேரம் பயணித்து தேமுதிக அலுவலகத்தை வந்தடைந்தது. அதன்பிறகு இறுதி சடங்குகளுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க புதைக்கப்பட்டது.
முன்னதாக இறுதி ஊர்வலத்தின்போது ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும், மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்களின் மொட்டை மாடிகளிலும் நின்று மலர்தூவி பிரியா விடை கொடுத்தனர். அதோடு விஜயகாந்தின் இறுதிசடங்கில் முக்கிய பிரமுகர்கள், விஜயகாந்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 200 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள், தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும் ரசிகர்களும், தொண்டர்களும் கலைந்து செல்லவில்லை. தேமுதிக அலுவலகத்தின் முன்பு திரண்டு நின்று அங்கு பொருத்தப்பட்டு இருந்த எல்இடி திரையில் விஜயகாந்தின் இறுதி சடங்கை துக்கத்துடன் பார்த்தனர். அப்போது அவர்கள், ‛‛வாழ்க கேப்டன்..’’ என கோஷமிட்டனர். மேலும் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்வதற்குள் இரவு நேரம் வந்துவிட்டது.
இதையடுத்து சாலைகளில் கூடியிருந்த தொண்டர்கள் தங்களின் செல்போன்களில் டார்ச் லைட் அடித்து விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் செல்போன்களில் டார்ச் லைட்டை ஒளிர செய்தது துக்கத்திலும் கூட விஜயகாந்த் மீதான அவர்களின் பிரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நெகிழ்ச்சியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடங்கியது. உடல் வைக்கப்பட்ட வாகனத்தின் மனைவி பிரேமலதா, 2 மகன்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். இதையடுத்து வாகனத்தின் முன்பும், பின்பும் மக்கள் அதிகளவில் நடந்து செல்ல தொடங்கினர். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனால் விஜயகாந்தின் உடலை ஏற்றி செல்லும் வாகனம் இன்ச்இன்ச்சாக மட்டுமே நகர்ந்தது. அதோடு சென்னை சாலையில் விஜயகாந்தின் உடலை எடுத்து சென்ற வாகனத்தை பார்த்த மக்கள் பெரிய பெரிய கவர்களின் பூக்களை கொண்டு வந்து தூவி விஜயகாந்தை வழியனுப்பினர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் முழுவதும் அவர் மீதான பாசத்தை மக்கள் பூக்கள் தூவி வெளிக்காட்டினர்.
இதனை பார்த்தவுடன் விஜயகாந்தின் 2 மகன்களும் கண்கலங்கினர். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் நின்று சென்ற அவர்கள் 2 பேரும் பொதுமக்களை பார்த்து கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு நன்றி செலுத்தினர். இறுதி ஊர்வலமான கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் முடிய உள்ளது. அதன்பிறகு இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications