ஐயோ! ஐஸ் பெட்டியில் மாரிமுத்துவுக்கு பதிலாக ஆதி குணசேகரன் படுத்திருக்கக் கூடாதா.. ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: ஐய்யோ இந்த ஐஸ் பெட்டியில் படுத்திருப்பது மாரிமுத்துவாக இல்லாமல் ஆதி குணசேகரனாக இருக்கக் கூடாதா என ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்தவர் மாரிமுத்து. ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தாலும் அதிலும் தனித்து நிற்பார் மாரிமுத்து . அந்த அளவுக்கு கிரியேட்டிவிட்டி! இதுதான் சினிமாவுக்கு தேவை.

சொல்லிக் கொடுப்பதை வாசிப்பதை விட கூடுதலாக சில வார்த்தைகளை போட்டு வசனங்கள் பேசுவது மிகவும் நன்றாக இருக்கும். அப்படியொன்றைத்தான் மாரிமுத்து செய்து வந்தார். இதற்காக அவருக்கு எதிர்நீச்சலில் முழு சுதந்திரத்தை இயக்குநர் திருச்செல்வம் அளித்திருந்தார்.
நன்றாக சினிமா, சீரியல் என பிஸியாக தனது 56 வயதிலும் ஓடிக் கொண்டிருந்தார். யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. நேற்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே தனது காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்த நிலையில் அவரது உடல் நேற்று வளசரவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. சிகப்பு, சாம்பல் நிற கோடுகளை கொண்ட சட்டையை அவர் அணிந்திருந்தார். பார்ப்பதற்கு தூங்குவது போல்தான் இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எல்லாம் இது பொய் செய்தியாக இருக்கக் கூடாது என நினைத்தார்களாம்.
இன்னும் சிலர் ஐஸ்பெட்டியில் படுத்திருப்பது மாரிமுத்துவாக இல்லாமல் ஆதி குணசேகரனாக இருந்திருக்கலாமே என்கிறார்கள். அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் இறந்துவிடுவது போல் காட்சிகள் இருந்திருக்கக் கூடாது. எதிர்நீச்சலில் அந்த கேரக்டர் இறந்துவிட்டால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்தான். ஆனாலும் மாரிமுத்து உயிருடன் இருந்து அடுத்தடுத்த படங்கள், சீரியலில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருப்பாரே என்பதுதான் அனைவரின் ஆதங்கமாக இருக்கிறது.
ஆதி குணசேகரன் கேரக்டர்தான் அந்த சீரியலுக்கே வலு சேர்த்திருந்தாலும் அவர் உயிருடன் இருக்கிறார், வேறு பிராஜெக்ட்டில் வந்து "மிரட்டுவார்" என்ற ஆறுதல் இருக்கும். ஆனால் இப்போது இனி இந்தாம்மா ஏய் என்ற குரலை நிஜத்தில் எப்போது கேட்பது என எதிர்நீச்சல் குடும்பமும் மாரிமுத்துவின் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications