வேன் மீது மட்டும் அவர் ஏறவில்லை.. எங்கள் மனதிலும் ஒரு படி ஏறிவிட்டார்.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் செல்பி எடுக்க வேன் மீது மட்டும் ஏறவில்லை, எங்கள் மனதிலும் ஒரு படி உயர்ந்துவிட்டார் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் என்றால் மக்களுக்கு அலாதி பிரியம்தான். பீச்சுகள், திருவிழாக்களில் நடிகர்களின் கட்அவுட்களுக்கு பக்கத்தில் நின்று புகைப்படம் எடுப்பதை இன்றைய நவீன உலகிலும் நாம் பார்க்க முடிகிறது.
ஒரு சீரியல் நடிகையை கோயிலில் பார்த்தால் கூட அவரை அருகில் பார்க்க வேண்டும், செல்பி எடுக்க வேண்டும், அந்த செல்பியை சமூகவலைதளங்களில் போட வேண்டும், தாம் பார்த்ததை நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் இருக்கிறது.

படை
சீரியல் நடிகர், நடிகைக்கே இப்படி ஒரு வரவேற்பு என்றால் சினிமா நடிகர், நடிகைகள் குறித்து கேட்கவே வேண்டாம். ரசிகர்களுடன் உறவாடுபவர்களில் இளைய நடிகர்களில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு உள்ளிட்டோரை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் முக்கியமானவர் விஜய். அவரை பார்த்துவுடன் அண்ணா அண்ணா என ரசிகர் படையே அவரை நோக்கி செல்கிறது.

ஷூட்டிங்
அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெறுகிறது. விஜய் என்எல்சியிலிருந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் வெளியே வந்த போதும் இதுகுறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என்எல்சியில் ஷூட்டிங் நடத்தக் கூடாது என பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு என்எல்சியில் ஷூட்டிங் குறித்து தெரியவந்தது.

வேன் மீது விஜய்
இதனால் விஜயை பார்க்க தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது தடியடியும் நடத்தப்படுகிறது. இரு நாட்களாக என்எல்சிக்கு வரும் ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத நிலையில் வேன் மீது விஜய் ஏறினார்.

ஒரு படி மேலே
வேனில் நின்றபடியே அனைவரையும் பார்த்து கையசைத்தார். பின்னர் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து வேனில் நின்றபடியே செல்பி எடுத்துக் கொண்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில் எப்போதும் கையசைத்துவிட்டு செல்லும் விஜய் இன்று எங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதை பார்க்கும் போது அவர் எங்கள் மனதில் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications