சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அன்று தோனி.. இன்று கோலி" தீபாவளியை ஒருநாள் முன்பாகவே கொண்டாட வைத்த ஜாம்பவான்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி தினத்திற்கு முந்தைய நாள் தோனி 183 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு தனியாளாக வெற்றியை தேடி கொடுத்தது போலவே, இன்றும் விராட் கோலி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் தனியாளாக போராடி விராட் கோலி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தீபாவளி கொண்டாட்டத்தை ஒருநாள் முன்பாகவே தொடங்கியும் வைத்துள்ளார். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி என எங்கும் திரும்பினாலும், விராட் கோலியின் பெயர் மட்டுமே உச்சரிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி.. சட்டென நிஜாமுத்தீன் தர்கா சென்ற ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்! மதவெறி, மதமாற்றம் கூடாதாம் தீபாவளி.. சட்டென நிஜாமுத்தீன் தர்கா சென்ற ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்! மதவெறி, மதமாற்றம் கூடாதாம்

தோனி - விராட் கோலி

தோனி - விராட் கோலி

இந்த நிலையில் தோனியின் 183 ரன்கள் அடித்த சம்பவத்தை திடீரென ரசிகர்கள் நினைவுபடுத்தி வருகின்றனர். ஏன் திடீரென தோனியின் 183 ரன்களை ட்ரெண்டாகி வருகிறது என்று தேடி பார்த்தால், விராட் கோலியின் இன்னிங்ஸிற்கும், தோனியின் இன்னிங்ஸிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது தெரிய வந்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

2005ம் ஆண்டு அக்.31ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அதில் சங்ககாராவின் அபார சதத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 298 ரன்கள் சேர்த்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரராக இருந்த தோனி தனியாளாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 145 பந்துகளில் 183* விளாசி ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

ட்ரெண்டிங்கில் தோனி

ட்ரெண்டிங்கில் தோனி

அன்றும் இதேபோல் தீபாவளியை ஒருநாள் முன்பாக ரசிகர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடினார். இப்போது விராட் கோலி அபார ஆட்டத்தால் ரசிகர்கள் தீபாவளியை ஒருநாள் முன்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த இரு வெற்றிகளும் தீபாவளிக்கு முந்தைய நாளில் வந்துள்ளதால் ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நாயக வழிபாடு

நாயக வழிபாடு

பொதுவாக நாயக வழிபாட்டின் மையமாக உள்ள இந்திய அணியில் அண்மைக் காலமாக விராட் கோலி ஃபார்ம் பற்றிய கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் ஆசியக் கோப்பைக்கு பின், விராட் கோலியின் ஃபார்ம் பற்றிய பேச்சுகள் எழவில்லை. ஏனென்றால் பழுதுக்கு சென்றிருந்த விராட் கோலியின் கிரீடம் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல சதத்தை விளாசி இருந்தாலும், உற்சாகத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் ஒரு இன்னிங்ஸை ஆடவில்லை என்று பார்க்கப்பட்டது.

விராட் கோலியின் அறிவிப்பு

விராட் கோலியின் அறிவிப்பு

இந்த பேச்சுகளுக்கு ஏற்றவாறு தனியாளாக களத்தில் நின்று கடைசி வரை போராடி, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலான இன்னிங்ஸை விராட் கோலி ஆடியுள்ளார். இந்த ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கிங் என்றால் யார் என்பதை விராட் கோலி மீண்டும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி


மீண்டும் தனது படையுடன் விராட் கோலி தனது அரியாசனத்திற்காக வந்துவிட்டார். அவருக்கான பட்டாபிஷேகத்தை ரோஹித் ஷர்னா அவரை தூக்கி கொண்டாடியதன் மூலம் நடத்தி முடித்துவிட்டார். இதன் மூலம் இந்திய அணியும் புதிய தெம்போடு உருவெடுத்துள்ளதால், டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Just like Dhoni scored 183 runs to single-handedly win the Indian team the day before Diwali, Virat Kohli has given the Indian team a win today. Just like Dhoni scored 183 runs to single-handedly win the Indian team the day before Diwali, Virat Kohli has given the Indian team a win today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X