ஓடி ஒளியுற ஆளில்ல.. மக்கள் என் பக்கம்தான்.. ஒரே செல்ஃபி.. வாயடைக்க வைத்த விஜய்!
Recommended Video
சென்னை: மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்ற நெய்வேலி சுரங்கம் அருகே நேற்று வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய். அந்த படத்தை இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தேங்ஸ் நெய்வேலி என அவர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டோவில் விஜய் ரொம்பவே யூத்னசுடன், பிரெஷ்ஷாக காணப்படுகிறார். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமும் தென்படுகிறது. வருமான வரித்துறையினர் சில தினங்கள் முன்பாக, விஜயை இங்கேயிருந்து, சென்னைக்கு காரில் அழைத்துச் சென்றனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றதாகவும், விஜய் தனது கைகளால் முகத்தை மூடிக் கொண்டதாகவும், செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்தான், ஓடி ஒளிகிற ஆள் இல்ல.. தேடி வந்து செல்ஃபி எடுக்கும் ஆளு என்று காண்பிப்பதை போல தனது முகத்தை பளிச்சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் விஜய். மேலும், தனக்கு பின்னால் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம், நாட்டுக்கே தெரியப்படுத்திவிட்டார் அவர். விஜய் பின்னால் காணப்படும் ரசிகர் வெள்ளம் இதற்கு சான்று.
|
ஆஸ்கர்
இதனிடையே, நெட்டிசன்கள், டுவிட்டரில் #ThalapathyVIJAYselfie மற்றும் #ThalapathySelfie என்ற இரு ஹேஷ்டேக்குகளை தேசிய அளவில் டிரெண்ட்டாக்கிவிட்டனர். நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள், பாருங்கள். ப்பா சுத்திப்போடுங்கப்பா மணுஷனுக்கு ஆஸ்கர் வாங்கிருந்தா கூட மணுஷனுக்கு இவ்ளோ சந்தோஷம் இருந்துருக்காது. இப்படி சொல்கிறார் இந்த நெட்டிசன். விஜய் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி போட்டோவில் தெளிவாக தெரிகிறது. இதைத்தான், நெட்டிசன் இப்படி புகழ்கிறார்.
|
நெஞ்சில் குடியிருக்கும்
இந்த செல்ஃபி விலைமதிப்பற்றது! இது ஒரு தங்கமான செல்பி! ஒவ்வொரு முறையும் தளபதி விஜய் ரசிகர்கள் தனது நெஞ்சில் ரசிகர்கள் குடியிருப்பதாக கூறுவார். அவர் அதை உண்மையிலும் கடைபிடிக்கிறார். வார்த்தைகளில் சொல்வதை, அவர் அவற்றை செயலிலும் காட்டுகிறார், அதில் இதுவும் ஒன்றாகும். அவரது முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள். இந்த செல்ஃபி காவியமாக இருக்கும்!
|
நாடாளுமன்றத்தில்
கட்சி ஆரம்பிக்கவில்லை ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு இல்லை எந்த கட்சியிலும் பதவியில் இல்லை ஆனல் அவருக்காக நாட்டின் நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்கிறது என்றால் அவர் ஒரு நடிகர் என்பதாலயா இல்லை அவர் பின்னால் உள்ள மக்க சக்திக்காக....தலைவன் on fire
|
ரிஸ்க் எடுத்த மனசு
நம்மள பாக்க வந்த ரசிகனுக்காக ரிஸ்க் எடுக்கிற அந்த மனசு. அதான் தளபதி என்கிறார் இந்த நெட்டிசன். ஆபத்து என தெரிந்தும், வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி விஜய் கையசைத்ததை அவர் இவ்வாறு குறிப்பிட்டு சிலாகிக்கிறார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications