கேஸ் சிலிண்டரில் மாற்றம்.. வீட்டு சமையல் சிலிண்டர் சப்ளை இனிமே இப்படித்தான்.. "1906" நோட் பண்ணுங்க
சென்னை: வாடிக்கையாளர்களின் நன்மை கருதி புதிய சாப்ட்வேர் ஒன்றை கேஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.. அது என்ன?
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும், சமையல் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.

வழக்கமாக சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளது.. டெலிவரி கட்டணம் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா என்றுகூட பலருக்கு தெரிவதில்லை.
கஸ்டமர்கள்: சிலிண்டர் விலையைவிட, கூடுதலாக 50 ரூபாய் கேட்கிறார்கள் டெலிவரி மேன்கள்.. ஆனால், இவர்களுக்கு எப்போதுமே பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அப்படி கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தரலாம் என்று ஏற்கனவே HPCL நிறுவனம் கண்டிப்புடன் கூறியிருந்தது.
அதேபோல, வீடுகளுக்கும், வணிக பயன்பாட்டிற்கும், ஒரே வகையான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது. இவைகளில், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது.. அவை அதிக பாதுகாப்புடன் தரமாக உள்ளன என்றாலும், வீடுகளுடன் ஒப்பிடும்போது, வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்..
வணிக பயன்பாடு: எனவே, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர், ரப்பர் குழாய்களை பயன்படுத்துவதால், அவை தரமற்று இருப்பதாகவும், இதன்காரணமாக நிறைய விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு, வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது..
அதுமட்டுமல்ல, 5 வருடத்துக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை மாற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும்.. ஆனால், பலபேர், அந்த ரப்பர் குழாயை மாற்றுவதே கிடையாது. இப்படி, மாற்ற வேண்டிய கஸ்டமர்களின் விபரம், கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளது. அதனால், அவர்களை தொடர்பு கொண்டு, ரப்பர் குழாய் மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, இதற்கு சிறப்பு சலுகையாக, ரப்பர் குழாய் விலையானது, 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாகவும் குறைக்கப்பட்டது..
நிறுவனங்கள்: இந்நிலையில், வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் ஆரம்பித்திருக்கின்றன.. அதன்படி, சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே சோதனை செய்து, தங்களின் செல்போனில் உள்ள செயலியில் பதிவு செய்வார்களாம்.
எண்ணெய் நிறுவனங்கள், கேஸ் இணைப்புகளை சோதனை செய்ய எட்டு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளன. அதன்படி, "சிலிண்டரில் இருந்து இருந்து கேஸ் அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், அடுப்பு மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும் உயரம், சிலிண்டர் இயக்கம், அவசர எண் "1906" குறித்த விழிப்புணர்வு, சமையல் அறையில் தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் குறித்து, டெலிவரி ஊழியர்களே ஆய்வு செய்வார்கள்.
கேஸ் ஊழியர்கள்: இதற்கான விவரங்களை, சம்பந்தப்பட்ட கேஸ் ஊழியரே, தன்னுடைய செல்போனில் உள்ள செயலியில் பதிவு செய்ய வேண்டும்... பிறகு, வாடிக்கையாளரின் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, OTP எண் வரும். இதற்கு பிறகு சோதனை முழுமையாக பெறும். ஆனால், இந்த சோதனைக்கு எந்தவிதமான கட்டணம் வசூலிக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, ரெகுலேட்டர், ரப்பர் குழாய் பாதிப்பு குறித்து கஸ்டர்கள் யாருமே சொல்வதில்லை.. இதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவே, டெலிவரி ஊழியர்கள் உதவியுடன் இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
விபத்துக்கள்: செல்போன் செயலியில் வாடிக்கையாளரின் சிலிண்டரில், எந்த தேதியில் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் பொருத்தப்பட்டது என்பது உள்ளிட்ட, சிலிண்டர் தொடர்பான அனைத்து தகவலும் பொருத்தப்பட்டிருக்கும்.. இதை வைத்து, ரப்பர் குழாய் மாற்றுவது உள்ளிட்டவை இனிமேல் எளிதாக நடக்கும்.. விபத்துகளும் ஏற்படாது" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications