"குபேர மூலை".. எடப்பாடிக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு போல.. பாஜக வேற.. செங்கோட்டையனுக்கு குஷி.. 3 மேட்டர்ஸ்
எடப்பாடி பழனிசாமி & கோ தரப்பு படுகுஷியில் காணப்பட 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன
சென்னை: அதிமுகவினர் இன்றைய தினம் படுகுஷியில் உள்ளனர்.. ஈரோடு கிழக்கில், எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. இதற்கு 3 காரணங்கள் உள்ளன..
இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள்..
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

படுகுஷி
அதிமுக தற்போது படுகுஷியில் உள்ளது.. கடந்த 10 நாட்களாகவே ஈரோடு கிழக்கு தொகுதியில், கலக்கத்துடனும், குழப்பத்துடனும், வலம்வந்து கொண்டிருந்த அதிமுகவினர், இப்போது தேர்தல் களத்தில் முன்பை விட சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் ஈடுபட்டுள்ளனர். வருகிற 9-ந்தேதி ஈரோட்டில் தென்னரசுவை வேட்பாளராக அறிமுகம் செய்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கான கூட்டம், பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே நடைபெறுகிறது.. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.. அந்த மேடையே படுபிரம்மாண்டமாக இருக்கிறதாம்.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நடத்தப்படுகிறது... இதற்கு பாஜக தலைவர்களும் வரக்கூடும் என்கிறார்கள்.

யுவராஜ் பலம்
கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று சொல்கிறார்கள்.. இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் தமாகா வேட்பாளர் யுவராஜ் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்... ஆனால், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தன்னுடைய மொத்த பலத்தையும் நிரூபிக்கும் தேர்தலாகவே இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி..

வாசன்
அதற்காகவே, தமாகாவுக்கு பதில், எடப்பாடி நேரடியாகவே போட்டியிட களமிறக்கி உள்ளதாகவும் தெரிகிறது. வழக்கம்போல் ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றாலும், இந்த முறை எடப்பாடி டீம், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு கையில் வைத்துள்ளதாம்.. இவைகளைதான் அம்மக்களிடம் கொண்டு செல்ல போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளாராம்..

குபேரமூலை
அதேபோல, மூத்த தலைவர் செங்கோட்டையனும் இன்றைய தினம் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.. முன்னதாக, இன்று காலை ஈரோடு மணல்மேடு பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் குபேர மூலையில் இருந்து தொடங்கியுள்ளது.குபேர மூலை என்றாலே செல்வம் தரும்... வெற்றியைத் தரும். இதிலிருந்தே நாங்கள் வெற்றி இலக்கை அடைந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.. ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

குபேர மூலை
அவர்கள் சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக ஆக வேண்டும்... திண்டுக்கல், மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி அடைந்தது போல் ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் தென்னரசு மிகப்பெரிய வெற்றி அடைவார் என்றார்.. இந்த முறை மோதுவது கை சின்னம் என்பதால், எளிதாக வென்றுவிடலாம் என்பதே அதிமுகவின் முக்கிய நம்பிக்கையாக உள்ளதாக சொல்கிறார்கள்.. ஆக, இரட்டை இலை சின்னம் உறுதியாகி உள்ள இந்த நாளில்தான், கடைசி நேரத்தில், பாஜகவும் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.. இந்த நாளில்தான் செங்கோட்டையனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.. ஆகமொத்தம், அதிமுகவுக்கு "குபேர மூலை" ஒர்க் அவுட் ஆயிடும்போல..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications