ஆஹா.. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் அரசு பஸ்ஸில் இலவச பயணம்.. அதென்ன "சாக்சம்".. சூப்பரு
சென்னை: மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் முழு ஓட்டை பதிவு செய்யவும், அவர்களுக்கு வாக்களிக்க உதவவும் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அது என்ன?
இன்றைய தினம் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும், 177 கூடுதல் வாக்குச்சாவடிகள் உட்பட 68,321 வாக்குச்சாவடிகள் உள்ளதால், இந்த வாக்குச்சாவடிகளில் 6.23 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க போகிறார்கள்.

வாக்குச்சாவடி: இந்த வாக்குச்சாவடிகளிலெல்லாம், வாக்குப்பதிவு பணிக்காக 3.32 லட்சம் பேர் பணியில்ஈடுபட்டுள்ளனர். அதாவது தொகுதிக்கு ஒருவர் என, 39 பொது பார்வையாளர்கள், 20 காவல்துறை பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்..
அந்தவகையில், அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது.. அதுமட்டுமல்ல, எக்காரணம் கொண்டும் வாக்காளர்கள் ஓட்டளிக்காமல் இருக்க கூடாது என்றும், இந்த முறை எப்படியாவது 100 சதவீத ஓட்டுப்பதிவை எட்டிவிட என்றும் தேர்தல் ஆணையம் பல்வேறு விஷயங்களில் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காகவே, சிறப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மாற்று திறனாளிகள்: அந்தவகையில், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் வாக்களிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்களுக்கு பொதுபோக்குவரத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.. அதன்படி, இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக, சாதாரண அரசு நகர சேவை பஸ்களில் இன்று இலவச பயணச்சீட்டில் பயணிக்கலாம்.
ஒருவேளை, குறிப்பிட்ட கிராமம் அவர்கள் வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் பொது போக்குவரத்து இல்லாவிட்டால் மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு மற்றும் உடலியக்க குறைபாடு கொண்டவர்கள் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டால் போதும்.. அவர்களை அழைத்து செல்வதற்கு வாகன வசதியும் ஏற்படுத்தி தரப்படும்...
சக்சம் செயலி: எனவே, 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம்.. அல்லது "சக்சம் செயலி" (Saksham) மூலமும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கும், அங்கிருந்து இல்லத்துக்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications