"NO 1": ஆரம்பமே அசத்தல்.. முழுசா எம்ஜிஆராகவே மாறிவிட்ட எடப்பாடியை பாருங்க.. பழனிசாமிக்கு ஒரே சிரிப்பு
சென்னை: எம்ஜிஆர் ஸ்டைலில் மாறிய எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. எம்ஜிஆரின் அதிமுக, இன்று எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் பூரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
அதிமுகவின் தலைமை மறைந்த பிறகு கட்சி 2ஆக பிரிந்து, பின் ஒருவர் தலைமையில் மறுபடியும் அதிமுக இணைவது தொடர்கதையாக மாறியுள்ளது..
எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. பிறகு, ஜானகி தனது அணியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைத்துவிட்டு அரசியல் வாழ்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

சட்டப்போராட்டம்
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே போன்ற பிரச்சனை அதிமுகவில் நிலவி வந்தது.. இதற்கான சட்டப்போராட்டத்தையும் நடத்தி, அதில் இன்றைய தினம் வெற்றியும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்... இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் கையெழுத்து
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வங்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.. அத்துடன், அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்...

மெரினா பீச்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... முன்னதாக, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா பீச்சில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்... பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அந்த நிமிடம், "நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என தொண்டர்களின் முழக்கம் மெரினா முழுவதும் எதிரொலித்தது...

ஸ்வீட் எடு கொண்டாடு
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்றனர். பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர்... காரை விட்டு எடப்பாடி பழனிசாமி இறங்கியதுமே, அவர்மீது மலர்களை தூவி வரவேற்றனர்... பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மாதவரம் மூர்த்தி இனிப்பு ஊட்டினார்.. எடப்பாடி பழடினிசாம், நேராக எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே சென்றார்.. அங்குநின்று, கைகளை கூப்பி வணங்கினார். பிறகு, 2 தலைவர்களின் காலடியில் தலை வைத்து மரியாதை செலுத்தினார்... மன உருக்கத்துடன் 2 பேரையும் வணங்கினார். அதற்கு பிறகுதான், கட்சி ஆபீசுக்குள்ளேயே காலடி வைத்தார்..

டிட்டோ எம்ஜிஆர்
டிட்டோ எம்ஜிஆர் அங்கிருந்த தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு எம்ஜிஆர் தொப்பியை அணிவித்தனர்.. இந்த தொப்பியை முன்கூட்டியே வாங்கி தயாராக வைத்திருந்திருக்கிறார்கள் போலும்.. உள்ளே நுழைந்ததுமே, வெள்ளை கலரில் எம்ஜிஆர் தொப்பி அணிவிக்கப்பட்டது.. பிறகு, எம்ஜிஆர் அணிவதைபோலவே, கருப்பு கலர் கூலிங்கிளாஸ் எடப்பாடிக்கு தொண்டர்கள் அணிவித்தனர்.. பிறகு, பிங்க் கலரில் ஒரு சால்வை போர்த்தப்பட்டது.. தொப்பி தலையில் வைத்து, கூலிங் கிளாஸை மாட்டிவிட்டதுமே, எடப்பாடிக்கு முகமெல்லாம் ஒரே பூரிப்பு.. ஒரே சிரிப்பு.. மலர்ந்த முகத்துடன், அவைகளை ஏற்றுக் கொண்டார்.. ஒருசில நொடிகளிலேயே, அச்சுஅசல் எம்ஜிஆர் போலவே உருமாறி நின்றார் எடப்பாடி பழனிசாமி.. அவரை அந்த கோலத்தில் பார்த்ததுமே தொண்டர்கள் உற்சாகமாகி, கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.. "எடப்பாடியார், எம்ஜிஆர் ஆன காட்சி"தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications