எல்ஐசி ஆதார் ஷீலா.. தினம் ரூ.87 போதுமே, ரூ.11 லட்சம் அள்ளலாம்.. பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு பாலிசி
சென்னை: வெறும் 87 ரூபாய் முதலீடு செய்து, 11 லட்சம் வரை சேமிக்க முடியும்.. அப்படிப்பட்ட சூப்பர் திட்டத்தைதான் எல்ஐசி வழங்குகிறது.
அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம், பொதுமக்களின் நன்மை கருதி, பல்வேறு காப்பீடுகளை வழங்கி கொண்டிருக்கிறது.. அத்துடன், பல பல திட்டங்களுக்கு, புதுபுது சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தந்து வருகிறது.

சிறப்பு திட்டம்: இதில் பெண்களுக்கு ஏராளமான சிறப்பு திட்டங்களையும் எல்ஐசி வெளியிட்டு வருகிறது.. அதில் ஒன்றுதான். ஆதார் ஷீலா பாலிசியாகும்.. பெண்களுக்கு நிதிப்பாதுகாப்பை வழங்குவதற்காகவே, இந்த திட்டத்தை எல்ஐசி கொண்டு வந்துள்ளது.
முதிர்ச்சியின்போது நிலையான பேஅவுட்டை இந்த திட்டம் வழங்குகிறது.. பாலிசிதாரருக்கு அகால மரணம் ஏற்பட்டால், காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
பலன்கள்: ஆதார் ஷீலா திட்டத்தின்கீழ், தினமும் வெறும் 87 ரூபாய் முதலீடு செய்தாலே போதும், 11 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.. 15 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்வதாக இருந்தால், இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.
நீங்கள் 15 வயதிலிருந்து 25 வயது வரை ஒரு நாளைக்கு ரூ.87 டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் 31,755 ரூபாயை சேர்க்க ஒரு வருடமாகும்.. அதன்படி இந்த திட்டத்தில் நீங்கள் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் நிலையான முதலீடு செய்து வந்தால் 3,17,550 ரூபாயை நீங்கள் டெபாசிட் செய்வீர்கள்.. அல்லது 70 வயதில், நீங்கள் திரட்டப்பட்ட தொகையை திரும்பப்பெற முடிவு செய்தால் ரூ.11 லட்சம் உங்களுக்கு திரும்பு கிடைக்கும்.
தகுதிகள்: இதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் சேரலாம்..
பாலிசிதாரர்கள் வயது 8 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 55 ஆண்டுகள் ஆகும்.. குறைந்தபட்ச பாலிசி காலம் 10 ஆண்டு முதல் அதிகபட்ச பாலிசி காலம் 20 ஆண்டு காலமாகும்.. அதிகபட்ச முதிர்வு வயது 70 ஆண்டு முதல் குறைந்தபட்ச முதலீடு ரூ 75,000 ஆகும்.
பாலிசிதாரர்கள் தொடர்ந்து 2 பாலிசி ஆண்டுகளை முடித்த பிறகு தங்கள் பாலிசியை ஒப்படைக்க விண்ணப்பிக்கலாம்.. ஆனால், பாலிசியை ஒப்படைத்தவுடன், பாலிசி காலத்தின்போது செலுத்த வேண்டிய உத்தரவாதமான சரண்டர் மதிப்பு, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.
ஆவணங்கள்: இந்த திட்டத்தில் இணைவதற்கு தேவையான ஆணவங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட்.. வீட்டுமுகவரி சான்று, டிரைவிங் லைசென்ஸ், மின்சார கட்டணம், ரேஷன் கார்டு, வாக்காளர் வருமானச் சான்று, வருமான வரி அறிக்கை அல்லது மாத வருமானம் சிலிப் இருந்தாலே போதும்.
மொத்தத்தில், ஆபத்து காலத்திலும், நெருக்கடி காலத்திலும், குடும்பத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பையும் இந்த திட்டம் வழங்குவதால், பெண்களின் வரவேற்பை நிறையவே பெற்றுள்ளது.
அதேபோல, பாலிசிதாரர் பாலிசிக்காலத்தின்போது இறக்க நேரிட்டால் அவரது நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.. இது வருடாந்திர பிரீமியம் தொகையில் 7 மடங்கு வரை அல்லது முதிர்ச்சி தொகையில் 110 சதவீதமாகும்.. அதுமட்டுமல்ல, முதிர்ச்சி தொகையுடன் லாயல்டி அடிஷனும் சேர்த்து வழங்கப்படும் என்பதால், நிதி பாதுகாப்பை அள்ளித்தரும் திட்டமாக இது திகழ்கிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications