பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ஆண் குழந்தைகளுக்கான பொன் மகன் திட்டம்.. தமிழ்நாட்டில் மட்டுமே ஸ்பெஷல்
சென்னை: ஆண் குழந்தைகளுக்காகவே வரப்பிரசாதமாக அமைந்துள்ள திட்டம்தான் பொன்மகன் சேமிப்பு திட்டம்.. இந்த திட்டத்தில் இணைவதற்கான அளவுகோல்கள் என்னென்ன? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது? இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்ன? தெரியுமா?
கடந்த 2015-ல் தொடங்கப்பட்ட இந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமானது, பெற்றோர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது.. எதிர்காலத்தில் ஆண் குழந்தையின் கல்விச் செலவுகளுக்கு நிதியளிக்க இந்த திட்டம் கைகொடுத்து உதவுகிறது.

லாபம்: குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். மொத்தம் 15 வருடங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது.
ஆண் குழந்தைகளின் நலனுக்காகவே துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது... வருடத்துக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாக கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். வட்டி 8.1 சதவீதம் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறக்கூடும்.
சிறப்பம்சம்: இந்த திட்டத்தில் இணைந்து 7வது வருடத்தில் 50% தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.. பிறகு, 15 வருடங்கள் கழித்து உங்கள் கணக்கினை முடித்து கொள்ளலாம்... ஒருவேளை, சிலருக்கு முன்கூட்டியே பணம் தேவைப்பட்டால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 வருடங்களுக்கு பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் உங்களது சேமிப்பு கணக்கில் உங்களது பணத்திற்கு வட்டியும் செலுத்த தேவையில்லை.
தகுதிகள் என்னென்ன: 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்... 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை துவங்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் குழந்தைகளுக்கு இதில் கிடையாது. கல்வி தகுதியும் கிடையாது.
பொன்மகன் சேமிப்புத் திட்டம் என்றாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால், NRI என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் குழந்தையாக இருக்க வேண்டும்..
கல்விக்கான பிற நிதி உதவிகளை அரசிடம் இருந்து பெறக்கூடாது.. தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை துவங்கலாம. ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்தும் இணையலாம்.
பொன்மகன் திட்டத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள்:
- பொன்மகன் திட்ட விண்ணப்ப படிவம்
- ஆண் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு போட்டோ
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வருமான சான்றிதழ்
- ஆண் குழந்தையின் நடப்பு கல்வியாண்டின் பள்ளி சான்றிதழ்
- ஆண் குழந்தையின் வங்கி கணக்கு விவரங்கள்
- இருப்பிட ஆதாரம் (வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை)
- ஆரம்ப வைப்புத்தொகை வெறும் ரூ.500 செலுத்தினாலே, குழந்தைக்கு பாஸ்புக் வங்கி தந்துவிடும்..
பொன்மகன் திட்டத்தை ஆன்லைனில் திறப்பது எப்படி?
- அருகிலுள்ள அஞ்சல் அலுவலக கிளைக்கு சென்று பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்ட விண்ணப்ப படிவத்தை கேட்டு பெற வேண்டும்
- படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்கள் மற்றும் வைப்புத் தொகை ஆகியவற்றை தபால் அலுவலக அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும்
- அதிகாரிகள் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, இறுதியாக கணக்கை திறப்பார்கள்.












Click it and Unblock the Notifications