எடப்பாடியார் இப்படி யோசிக்கிறாரே.. எல்லாமே சரியா வருமா? திமுக மிஸ் பண்ணுதோ? அல்லாடும் இரு கட்சிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வரும் சூழலில், கூட்டணி குறித்த உறுதிப்படுத்தப்படாத பல தகவல்களும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது.

திமுகவுக்கு மாற்றான இதே போன்ற பலமான கூட்டணியை அதிமுகவும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாஜகவையும் சமாளித்து, மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்து கொண்டதில் இருந்தே, அதிமுகவுக்கான ஆதரவு எதிர்பார்த்த அளவுக்கு வராமலும் உள்ளது.

Fantastic Strategies by Edappadi Palanisamy and Will AIADMK form alliance with DMDK PMK Soon

பாமக, தேமுதிக 2 கட்சிகளுமே ராஜ்யசபா சீட் கேட்டு வருகின்றன. தேமுதிக, பாமக இரு கட்சிகளின் எதிர்பார்ப்பை அதிமுக ஏற்கவில்லை. பிறகு பாஜகவும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லையாம்..

பாமக கூட்டணி: பாஜகவுடன் இவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்பது தெரிந்ததுமே, மறுபடியும் இக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது அதிமுக.. அப்போது, பாமகவுக்கு 7, தேமுதிகவுக்கு 3 சீட்டுகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம். ஆனால், ராஜ்யசபா சீட் 2 பேருக்குமே கிடையாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டதாம்.

அதுமட்டுமல்ல, ஏற்கனவே திமுக கூட்டணியிலும் பாமக, தேமுதிக கட்சிகளின் எதிர்பார்ப்புகள் ஏற்கப்படவில்லையாம்.. அதனால், திமுக கூட்டணியில் இக்கட்சிகளுக்கு பெரிதாக வாய்ப்பும் இல்லை.. இதுவே எடப்பாடி பழனிசாமிக்கு பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது.

பாமக, தேமுதிக: அதாவது, பாமக, தேமுதிகவுடன் பாஜகவும் கூட்டணி வைக்கவில்லை, திமுகவும் கூட்டணி வைக்கவில்லை என்பதால், அதிமுக கூட்டணிக்கு மட்டுமே அவர்கள் வந்தாக வேண்டிய நிலைமை உள்ளது. அதனால்தான், பாமக, தேமுதிகவின் இழுப்பிற்கு செல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாம்.

ஏற்கனவே பாஜகவை கூட்டணியில் சேர்க்காமல் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார்.. பாஜகவின் தமிழக வேட்பாளர் லிஸ்ட்டையும், அதிமுக வருகைக்கான சமிக்ஞையாக வெளியிட்டபோதும், எடப்பாடியின் மனம் இறங்கவில்லை.. எடப்பாடியின் பிடிவாதமும் தளரவில்லை..

சைக்கிள் தூதுவன்: எத்தனையோ முறை பாஜக தரப்பில் சமாதான பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மேலிடத்திலிருந்து 2 மூத்த தலைவர்கள் பேசியும்கூட, எடப்பாடி பழனிசாமி பாஜகவுடனான கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அவ்வளவு ஏன்? தமாகா தலைவர் ஜிகே வாசன் சைக்கிளில் தூதாக வந்து பேசினார். எதுவுமே எடுபடவில்லை. கூட்டணிக்கு கட்சிகள் வந்தால் பேசுவோம். இல்லையெனில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்றே வாசன் உள்ளிட்டோருக்கு எடப்பாடி தந்த பதிலாக இருந்ததாம்.

அதுமட்டுமல்ல, தேமுதிக, பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்று 2ம் கட்ட தலைவர்கள்தான் வலியுறுத்தினார்களாம்.. அதனால்தான், எடப்பாடி கூட்டணிக்கு ஒப்புக் கொண்டாராம். எனினும் ஒரு விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தெளிவாக உள்ளதாக தெரிகிறது.

வியூகம்: பாஜகவுடன் கூட்டணி இல்லை + யாருடனும் இறங்கி சென்று கூட்டணி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை + பாமக, தேமுதிகவுக்கு 6 மற்றும் 4 சீட்களை ஒதுக்கிவிட்டு 30 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் வியூகமாக உள்ளதாம். சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும், அவர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.

மொத்தத்தில்... ஒரு முறை முடிவு செய்துவிட்டால், எடப்பாடியின் பேச்சை அவரே கேட்க மாட்டாராம்..!! அந்த அளவுக்கு மனஉறுதியும், தன்னம்பிக்கையும் உடையவராம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+