Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து விற்பனை.. பத்திரப்பதிவு பண்ணும்போது.. 2 முறை விரல் ரேகை பதிவு.. பதிவுத்துறையில் புது சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு நடைமுறைகளின்போது, ஆள்மாறாட்டம் நடக்க கூடாது என்பதற்காகவும், போலி பத்திரங்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காகவும், பதிவுத் துறை, கடந் வாரம் புதிய நடவடிக்கையை கையில் எடுத்திருக்கும் நிலையில், அதுகுறித்த கோரிக்கை ஒன்று கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக பதிவுத்துறை என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

போலி பத்திரப்பதிவை தடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்திரப்பதிவின்போது சொத்து விற்பவர், வாங்குபவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது வழக்கம் என்பதால், இதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

registration department finger prints

ஆதார் ஆணையம் சில மாற்றங்களை செய்ததால், புதிய மற்றும் பழைய கருவிகள் வாயிலாக விரல் ரேகை பதிவு செய்யப்படும் என, பதிவுத் துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.

பதிவுத்துறை: இது குறித்து பத்திர பதிவுத்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில், "ஆதார் வழி ஆவணதாரர்களை அடையாளம் காண "Mantra MFS 100" (LO Finger print Device) στο தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட L1 Finger print Device-களை மட்டுமே 01.10.2024 முதல் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி, நமது துறையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் "Mantra MFS 110" என்ற L1 Finger print Device திருவாளர்கள் எல்காட் நிறுவனம் வழி முன்பே வழங்கப்பட்டுள்ளது.

ஆவணதாரர்கள்: பதிவுத்துறை சட்டத்திற்கு ஏற்ப ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமித்து வைக்க வேண்டியிருப்பதாலும், L1 Finger Print Device களைப் பொருத்து விரல் ரேகையை சேமிக்க இயலாது என்பதாலும் Lo - Finger Print Device ஆவணதாரர்களின் கைரேகையை சேமிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் இரண்டு முறை விரல் ரேகை கருவிகளையும் (LO மற்றும் L1) பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் ஆவணதாரர்களை அடையாளம் காண ஸ்டார் 2.0 மென்பொருளில் புதிய விரல் ரேகை கருவியினை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

ஸ்டார் 2.0: ஆவணதாரர் விரல் ரேகையை முதலில் L1 Finger print Device(Mantra MFS 110)-ல் பதிக்க வேண்டும். (இரண்டு கருவிகள் இருப்பதால் இதனை எளிதாக அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த கருவியில் "முதலாவது/First" என்று எழுதி ஒட்டிக்கொள்ளலாம்) ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு ஸ்டார் 2.0 மென்பொருள் "சரி/தவறு" என்ற தகவலைத் தரும்.

தற்போதைய நடைமுறைப்படி விரல் ரேகை பொருந்தாத நிலையில் "கருவிழிப்படல வருடி(Iris Scanner)" வழியாக அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். கருவிழிப் படல வருடி கருவியைப் பொறுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள கருவியையே பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலதாமதம்: ஆனால், இந்த 2 முறை விரல் ரேகை பதிவால், பத்திரப்பதிவு தாமதமாவதாக கூறப்படுகிறது.. அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், புதிய கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.. இவைகளில் தகவல் தொகுப்பில் சேர்த்து வைப்பதற்கும், சரி பார்ப்பதற்கும் என, இரண்டு முறை விரல் ரேகை பெறப்படுகிறது. இதன்காரணமாக, பத்திரப்பதிவு தாமதமாகிறதாம்.

இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் தரப்பில் சொல்லும்போது, "பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடக்க கூடாது என்பதற்காக தான் பதிவுத் துறை இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இதில், முதலில் ஒரு கருவியில் விரல் ரேகை பெற்று, அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு கருவியில் விரல் ரேகை பதிய வேண்டும்.

கோரிக்கை: ஆனால், பதிவுத் துறை கணினி தகவல் தொகுப்புக்கான, சாப்ட்வேர் விரைவாக செயல்படாததால், ஒரு நபரின் விரல் ரேகை பதிவுக்கு, 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது.. அதனால் குறிப்பிடப்பட்ட நேரத்துக்குள் பத்திரங்களை பதிவு செய்ய இயலவில்லை... பொது மக்களும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது...

ஒரே முறையில் இந்த பணியை முடிக்க நவீன வசதியை அறிமுகப்படுத்தினால், பத்திரப்பதிவு விரைவாக முடியும், பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும் என்று, மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்" என்று கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+