சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடிமடியில் கைய வெச்சிட்டாரே".. அப்ப எடப்பாடியின் "வோட் பேங்க்?".. பரமபதம் ஆடும் பன்னீர்.. 2 ப்ளான்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2 வியூகங்களை ஓபிஎஸ் கையில் எடுக்க போகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகம் எடுத்துள்ள நிலையில், 2 விதமான வியூகங்களை இனி கையில் எடுக்க போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள்.

பாஜகவை ஒரேடியாக எதிர்க்க முடியாத அளவுக்கு பலவித நெருக்கடிகள், எடப்பாடிக்கு இருந்தாலும்கூட, தன் முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று எடப்பாடி ஒருபக்கம் சொல்லி வந்தால், நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ்ஸும் சொல்லி வருகிறார்.. அத்துடன், புதிதாக மாவட்ட செயலர்களையும் நியமித்துள்ளார்.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும், புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளதுடன், பொதுக்குழு உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்...

சிகரெட் பிடிச்சா இத்தனை நோய்களா? இப்போதும் ஒன்னும் கெட்டு போகலை! விட்டுடுங்க.. டாக்டர் பரூக் அட்வைஸ் சிகரெட் பிடிச்சா இத்தனை நோய்களா? இப்போதும் ஒன்னும் கெட்டு போகலை! விட்டுடுங்க.. டாக்டர் பரூக் அட்வைஸ்

லிஸ்ட் ரெடி

லிஸ்ட் ரெடி

புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓபிஎஸ் இன்றைய தினம் நடத்தி வருகிறார்.. மேலும் சில முக்கிய தகவல்களை ஓபிஎஸ் இன்றைய தினம் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அது என்ன தகவல் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், ஓபிஎஸ் 2 விஷயங்களில் காய்நகர்த்த திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்..

A ப்ளான்

A ப்ளான்

முதலாவதாக, எடப்பாடி பழனிசாமியின் பலத்தை குறைப்பதே அந்த திட்டம்.. இதற்காகவே கடந்த 2 மாத காலமாகவே, தூது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அவைகள் தற்போது ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்துள்ளது.. போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்துள்ளனர். இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சி நடந்து வருகிறது..

B ப்ளான்

B ப்ளான்

இரண்டாவதாக, மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பிறகு, பொதுக்குழு கூட்டம் நடக்கும் நடத்தப்படுமா? என தெரியவில்லை.. ஆனால், அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.. இதில் கொங்குவில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.. காரணம் கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பிரித்ததில் மட்டுமல்லாமல் ஆட்சியையே இழக்க காரணமாகவும் இருந்தது டிடிவி தினகரன் + சீமானும்தான் என்பதை மறுக்க முடியாது. திமுக, பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்ததும் பெரும்பாலும் இவர்கள்தான்..

செங்குந்தர்

செங்குந்தர்

இந்தமுறையும் தமிழ்தேசிய அரசியலை வைத்து, அதிமுகவின் தேவேந்திர குல வேளாளர் + செங்குந்தர் + யாதவர் + முத்தரையர் போன்ற கணிசமான வாக்குகளை அள்ள சீமான் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. இதைதான், நொறுக்கி தள்ள ஓபிஎஸ் கணக்கு போடுகிறார்.. அதேசமயம், கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத பிற ஓட்டுக்களை ஓபிஎஸ் குறி வைத்துள்ளாராம்.. கவுண்டர் சமுதாயத்தின் வாக்குகளை அள்ளவே, திமுக + எடப்பாடி + பாஜக போன்ற மொத்த கட்சிகளும் போட்டிபோட்டு வரும்நிலையில், ஓபிஎஸ் மட்டும் தனி ரூட்டை எடுத்துள்ளார்.. கவுண்டர் சமுதாயம் அல்லாத பிற சமுதாய மக்களை ஈர்க்க முடிவு செய்துள்ளாராம்..

பண்ருட்டியார்

பண்ருட்டியார்

ஒருமுறை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். "கொங்கு அல்லாத பிற சமுதாய ஓட்டுக்களை நோக்கியே ஓபிஎஸ் செல்கிறார் என்றும், இதற்கு வன்னிய முகமான பண்ருட்டி ராமச்சந்திரன்தான் உறுதுணையாக இருப்பதாக தெரிகிறது.. ஆனால் மிகச்சிறந்த வியூகம் இது" என்று கூறியிருந்தார்.. அந்தவகையில், பண்ருட்டியாரை வைத்து ஓபிஎஸ் போடும் கணக்கு, எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை தந்துவருகிறது..

வோட் பேங்க்

வோட் பேங்க்

கொங்கு மண்டலமே என்றாலும், கடந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு உதவியது பாமகவின் வன்னியர் ஓட்டுக்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த முறை பாமக கூட்டணியில் இல்லாதபட்சத்தில், எடப்பாடிக்கான ஓட்டு வங்கி, கொங்குவில் முழுமையாக கிடைக்குமா? என்பது தெரியாது.. போதாக்குறைக்கு, ஓபிஎஸ்ஸின் புதுவியூகமும் எடப்பாடிக்கு டபுள் கலக்கத்தை தரக்கூடும் என்கிறார்கள். இன்றைய தினம் கூட்டம் முடிந்தபிறகுதான், ஓபிஎஸ்ஸின் அரசியல், வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பார்ப்போம்..!!

English summary
Fantastic two plans and ops starts a new political account in kongu region with panruti ramachandran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X