”நாம யாருன்னு காட்டுடா” நட்புக்காக விஜயகுமார் போல.. கார் ஷோரூமில் சம்பவம் செய்த விவசாயி.. ரூ.3 கோடி!
சென்னை: விவசாயி ஒருவர் தலைப்பாகை, வேஷ்டி குர்தாவுடன் ரூ.3 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கி ஓட்டிச்செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நட்புக்காக படத்தில் விஜயகுமார் சரத்குமார் சென்னைக்கு விமானத்தில் வந்து காரை வாங்கி ஷோ ரூம் மேனேஜரை திகைக்க வைப்பது போல நிஜத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சரத்குமார் - விஜயகுமர் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் 'நட்புக்காக'.
இந்த படத்தில் சென்னைக்கு வரும் சரத்குமாரும், விஜயகுமாரும் ஒரு கார் ஷோரூம் போய் காரை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது, கார் ஷோரூமின் மேனேஜர் இவர்களை யார் உள்ளே விட்டது என்று சத்தம் போட்டபடி வருவார்.

மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்
விஜயகுமார், "காரின் விலை எவ்வளவு?" என கேட்பார். அதற்கு, "பார்ப்பதற்கெல்லாம் விலை கிடையாது!" என்று மேனேஜர் நக்கல் செய்வார். விஜயகுமார் வேஷ்டியுடன் கிராமத்து ஆளாக வந்திருப்பார். "இவரெல்லாம் எங்கே கார் வாங்குவார்?" என ஏளனம் செய்த மேனேஜருக்கு, தான் கொண்டு வந்த மூட்டையில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து கொடுத்து, ஷோரூம் மேனேஜரை திகைக்க வைப்பார்.
படம் வெளியாகி ஆண்டுகள் ஆனாலும், இன்றைய ஜென் Z தலைமுறையினர் கூட விரும்பி பார்ப்பதற்காக இக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? என நெட்டிசன்கள் கமெண்ட்களில் ஃபயர் விட்டதை பார்க்க முடிகிறது. அதே மாதிரியான ஒரு நிகழ்வுதான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பற்றிய விவரம் வருமாறு:-
ரூ.3 கோடி மதிப்புள்ள கார்
விவசாயி ஒருவர், மெர்சிடஸ் GLஐஎஸ் (GLS) மாடல் காரை வேட்டி, குர்தா அணிந்தபடி தனது மனைவியுடன் வந்து வாங்குகிறார். புதிதாக ஷோரூமில் எடுக்கப்படும் இந்த காருக்கு மாலை போட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மெர்சிடஸ் ஜி வேகன் எஸ்யூவி காரின் விலை ரூ.3 கோடி. இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
"விவசாயிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்" என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஷோரூமுக்குள் விவசாயி நுழைந்து தனது புதிய காரை பார்க்கிறார். உடன் நின்ற அவரது மனைவி காருக்கு பொட்டு வைத்து ஆரத்தி செய்கிறார். இதையடுத்து, காருக்குள் கம்பீரமாக ஏறி, பிரார்த்தனை செய்து, காரில் உள்ள அம்சங்களை ஆராய்கிறார்.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
புன்னகையுடன் காரை இயக்கி, ஷோரூமிலிருந்து கெத்தாக வெளியேறுகிறார்.
இந்த பதிவு நெட்டிசன்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், சில நெட்டிசன்கள், இது பழைய வீடியோ - மீண்டும் வைரலாகிறது எனக் கூறுகிறார்கள்.
தனது விவசாயி தந்தைக்குப் மகன் கிப்ட் ஆக வாங்கிக் கொடுத்ததாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இது வைரலான வீடியோவாக இருந்தது; தற்போது அதை மீண்டும் ட்ரெண்ட் செய்கிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளனர்.
"உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஆனால், விவசாயியாலும் பல கோடி மதிப்புள்ள காரை வாங்க முடியும் என்பதை காட்டும் விதமாக, இந்த வீடியோ அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications