மேஜர் மிஸ்ஸிங்! வேளாண் பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு இல்லை.. விவசாயிகள் ஏமாற்றம்
சென்னை: தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வேளாண் கடன் ரத்து அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
தமிழக அரசின் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். 2025-26 ஆம் ஆண்டு வேளாண் துறைக்கு 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே உள்ள நிலையில் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி வேளாண் பட்ஜெட் இது. எனவே இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் அறிவிப்புகள் இடம் பெறும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின் போது அளித்த நகைக்கடன் தள்ளுபடி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த பட்ஜெட்டில், விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் இருந்தது.
ஆனால். விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் வகையில் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. வரும் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ள சூழலிலும், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
எனினும், விவசாயிகள் மகிழும்படியான பல நல்ல அறிவிப்புகளும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பற்றுள்ளன. தமிழக வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-2026 ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பயிர்க்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர்களின் குறுகியகால கடன் தேவைகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலமற்ற பட்டியல் இனத்தவருக்கு வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வாங்க மற்றும் பராமரித்திட கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம் சார்ந்த மத்திய காலக் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு மூலதனக் கடன்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டு முதல் வட்டி மானியம் மற்றும் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான வட்டி ஊக்கத்தொகை 2,162 கோடியே 84 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் வட்டி மானியத்திற்கென 853 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025 - 26ம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கென 1,477 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications