தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. செப். 1 முதல் வரும் மாற்றம்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நெல் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் செப். 1ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இனி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. கடந்த காரிப் பருவத்தில் மட்டும் சுமார் 33 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

8 Read more at https tamil oneindia com news chennai tamil-nadu-govt-orders-to-monitor-hill-districts-in-tamil-nadu-after-wayanad-disaster-626769 html


இதற்கிடையே நெல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகக் கொண்டு வரும் செப். 1ம் தேதி முதல் நெல் கொள்முதலுக்கான விலை உயர்த்தப்படுவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி: இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத்தந்ததால் 2022-2023 காரிப் பருவத்திலிருந்து செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

2023 – 24 காரிப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடமிருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 7,277.77 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. "இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்.." தமிழக அரசு உத்தரவு


அறிவிப்பு: 2024-2025 காரிப் பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 130/- சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2300/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 105/- சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405/- என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+