வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. "இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்.." தமிழக அரசு உத்தரவு
சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மலைக் கிராமங்கள் இருக்கும் மாவட்டங்களைக் கண்காணிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மழை நேரத்தில் தீவிர கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாட்டில் ஏற்பட்ட இந்த மிக மோசமான நிலச்சரிவில் பல கிராமங்கள் மண்ணில் புதைந்தன.

இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழக அரசு உத்தரவு: இதற்கிடையே வயநாடு பேரிடர் எதிரொலியாகத் தமிழகத்தில் மலைக் கிராம மாவட்டங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நாட்களில் நிலைமையைக் கண்காணித்து உடனுக்கு உடன் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைக் காலங்களில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு எதிரொலியாகத் தமிழகத்தில் மலைக் கிராமங்களில் இருக்கும் மாவட்டங்கள் கண்காணிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மழை நாட்களில் எங்கே வெள்ளம் ஏற்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
8 மாவட்டங்கள்: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக மழை நேரத்தில் வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் மழை நேரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படு வருவதாக அரசுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரள நிலச்சரிவு: கேரளாவில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் நான்கு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவே பாதிப்புகள் இந்தளவுக்கு மோசமாக இருக்கக் காரணமாகும். பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை என பல்வேறு தரப்பினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், கூட மீட்புப் பணிகள் சவால் மிகுந்தவையாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1500 மீட்டர் உயரம்: இதற்கிடையே, நேற்றைய தினம் இந்த வயநாடு நிலச்சரிவு தொடர்பாக சில முக்கிய சாட்டிலைட் படங்களை இஸ்ரோ வெளியிட்டது. சுமார் 86,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இருவைப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்குச் சரிந்துள்ளது. சுமார் 1,550 மீட்டர் உயரத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அது ஆற்றின் போக்கை மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications