Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் கவனத்திற்கு! அரசின் திட்டத்தில் இணைய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு!

விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள அரசின் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு;

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை

உளுந்துக்கு கிலோ ரூ.66, பாசிப்பயறுக்கு ரூ.77.55 என ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது (Minimum Support Price), தமிழ்நாட்டில் உள்ள பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை நடப்பு ராபிப் பருவத்தில் 60,203 டன் உளுந்தும், 12,605 டன் பச்சைப்பயறும் கொள்முதல் செய்வதற்காக ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி பெற்று, கொள்முதல் பணியினை துவங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொள்முதலுக்கு தரம் அவசியம்

கொள்முதலுக்கு தரம் அவசியம்

அறுவடை முடிந்தவுடன், உளுந்து, பாசிப்பயறை நன்கு காயவைத்து, சுத்தம் செய்து, கல், மண், தூசி, கலப்பின விதை, முதிர்ச்சியடையாத விதை, வண்டு தாக்கிய விதை, ஈரப்பதம் போன்ற காரணிகளில் அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் கொள்முதலுக்கு கொண்டு வரவேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

விலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறைக்கூடத்திற்கு சென்று, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலுடன் தங்களது பெயரை பதிவு செய்திட வேண்டும். சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

 விவசாயிகள் பயன் பெற வேண்டும்

விவசாயிகள் பயன் பெற வேண்டும்

தற்போது, உளுந்து, பச்சைப்பயறு அறுவடை நடைபெற்று வருகின்றது. எனவே, தமிழ்நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த உளுந்து, பாசிப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து பயன்பெறுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+