T.Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜ் பெயருடன் குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா!
சென்னை: ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா தனது குழந்தையின் பாதத்தை கையில் ஏந்தியபடி ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டுள்ளார். தந்தையின் பெயர் டி.தங்கராஜ் தங்கவேல் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தனது மாமா மகள் ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகைப்படங்கள், வீடியோக்களுடன் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
தன்னை ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தன்னுடன் 4 ஆண்டுகள் அவர் குடித்தனம் நடத்தியதாகவும், இதனால் தான் பலமுறை கர்ப்பம் அடைந்த போது அதை வற்புறுத்தி கலைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தான் தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் இதையும் கலைத்துவிடும்படி மாதம்பட்டி ரங்கராஜ் மிரட்டியதாகவும் அதற்கு நான் மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தன்னுடன் பழகி குழந்தையை கொடுத்துவிட்டு தற்போது தன்னுடன் பேச மறுக்கிறார் என மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சென்னை மகளிர் ஆணையம் இருவரிடமும் விசாரணை நடத்தியது.
ஒருமுறை விசாரணைக்கு கூட தனது மனைவி ஸ்ருதியின் கைகளை இறுக பிடித்தபடியே மாதம்பட்டி ரங்கராஜ் வந்திருந்தார். இந்த நிலையில் தனக்கும் தனது குழந்தைக்கும் மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ 6.50 லட்சம் வழங்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் நோட்டீஸ் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டாவுக்கு கடந்த 31 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமண புகைப்படத்தை போட்ட ஜாய், எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்திருந்தார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக பிறந்த மகனை நேரில் போய் பாருங்கள் என பலர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு இன்ஸ்டாவில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா தற்போது ஒரு இன்ஸ்டா ஸ்டோரியை வெளியிட்டுள்ளார். குழந்தையின் காலை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஜாய், குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தந்தையின் பெயர் என்ற இடத்தில் டி.ரங்கராஜ் தங்கவேல், வயது 43, தொழில்- செஃப் என பதிவிட்டுள்ளார். மேலும் தந்தையின் பெயர் என உங்களை குறிப்பிட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. நம் வாழ்வில் சில கதாபாத்திரங்கள் பெருமையை கொடுப்பதற்கு பதிலாக வலிகளை கொடுக்கும் என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் என்ற ஹேஷ்டேக்கையும் போட்டுள்ளார்.

ஜாய் மற்றொரு பதிவில் "ஹலோ டாடி மாதம்பட்டி ரங்கராஜ், ரெடியா ஆரம்பிக்கலாமா டாடி, இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு! இப்படிக்கு உங்கள் வாரிசு- மாதம்பட்டி ராஹா ரங்கராஜ் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதே நீதிமன்றம், மகளிர் ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு ஜாய் அலைந்தார். தற்போது குழந்தையும் பிறந்துவிட்டது. இனி இந்த வழக்கு என்ன மாதிரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜாய் கேட்டது போல் பராமரிப்புத் தொகையை கொடுக்க மாதம்பட்டி ரங்கராஜ் முன்வருவாரா? இல்லை இந்த வழக்கு இன்னும் நீண்டு கொண்டே இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications