இனி ஏர்போர்ட்ல காத்திருக்க வேண்டாம்.. நொடியில் முடியும் இமிக்ரேஷன் பிராசஸ்.. விரைவில் சென்னையில்!
சென்னை: விமான நிலையங்களில் இமிக்ரேஷனுக்காக சில மணி நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்க்கும் வகையில், டெல்லி விமான நிலையத்தில் ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் - டிரஸ்டட் டிராவலர் புரோகிராம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சில நொடிகளில் இமிக்ரேஷன் பிராசஸ் முடிவடைந்து விடும். இந்த முறை விரைவில் சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் குடியேற்ற நடைமுறையை பின்பற்றி பதிவு செய்வது கட்டாயம். இந்தியா மட்டுமல்லாது எல்லா நாடுகளிலும் இந்த இமிக்ரேஷன் பிராசஸ் உள்ளது. இதற்காக விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதனை எளிதாக்கும் வகையில், 'ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் - டிரஸ்டட் டிராவலர் புரோகிராம்' (FTI - TTP) எனும், விரைவு குடியேற்ற சேவை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் திட்டத்தின் (FTI - TTP) கீழ், முன் சரிபார்க்கப்பட்ட விமானப் பயணிகளுக்கு புறப்பாடு மற்றும் வருகையின் போது, குடியேற்றத்திற்கான தடையற்ற அனுபவத்தை வழங்க பயோமெட்ரிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இது விரைவில் நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா, வெளிநாடுகளில் வசிப்போரின் முக்கியமான ஒரு சர்வதேச பயண நாடாக மாறி வரும் நிலையில், அனைவருக்கும் பயண அனுபவத்தை சிரமமில்லாததாக மாற்றுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியான பயணிகள் ஆட்டோமேட்டிக் கேட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் (இ-கேட்கள்) மற்றும் தடையற்ற பயணத்திற்கு வழக்கமான நீண்ட கியூவை தவிர்க்கலாம் என்றும் ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் விரைவில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா மற்றும் பிற நகரங்களில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இதன் மூலம், முன்கூட்டியே விவரங்கள் சரிபார்க்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களின் இமிக்ரேஷன் செயல்முறை சில நொடிகளில் செய்யப்படுகிறது. FTI-TTP ஆனது ஆன்லைன் போர்ட்டல் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த முறைக்கு விண்ணப்பித்து, தேவையான விவரங்களை அளித்த பிறகு, தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, இ-கேட்கள் மூலம் செயல்படுத்தப்படும் நம்பகமான பயணிகளின் வொய்ட் லிஸ்ட்டில் பயணிகள் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கென பிரத்யேக வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வழியாகச் செல்லும் பயணியின் பயோமெட்ரிக்ஸ் வெளிநாட்டில் உள்ள பிராந்தியப் பதிவு அலுவலகம் அல்லது விமான நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.
பதிவுசெய்யப்பட்ட பயணிகள் இ-கேட்களை அடையும் போது, அவர்கள் தங்கள் விமானத்தின் விவரங்களைப் பெற விமான நிறுவனங்கள் வழங்கிய போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணிகளின் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்படும். பயணியின் அடையாளம் கண்டறியப்பட்டு, பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யப்பட்டவுடன், இ-கேட் தானாகவே திறக்கப்பட்டு, குடியேற்ற அனுமதி வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?: தகுதியான நபர்கள் www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான விவரங்களை வழங்க வேண்டும், அவை இமிக்ரேஷன் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, சர்வதேச விமான நிலையங்கள் அல்லது அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அவர்களின் பயோமெட்ரிக்ஸை பதிவு செய்வதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டை ஷெட்யூல் செய்வதற்கான செய்தியைப் பெறுவார்கள்.
எஃப்டிஐ பதிவு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் வரை செல்லுபடியாகும். பயோமெட்ரிக்ஸ் வழங்குவது கட்டாயம் என்றும், FTI-TTP க்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு பாஸ்போர்ட் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications