கொரோனாவால் சாக கூடாதுன்னீங்க.. இரட்டை கொலை பண்ணிருக்கீங்களே.. விடக் கூடாது.. திருமா. ஆவேசம்
கோவில்பட்டி மர்ம மரணங்கள் தொடர்பாக விசிக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "கொரோனாவால் சாக கூடாதென கடையை மூடச் சொன்னவர்கள் இப்படி இரட்டை கொலையை செய்துள்ளனர்... இந்த கொலையை செய்தவர்களை ஜாமீனில்கூட விட கூடாது" என்று விசிக திருமாவளவன் ஆதங்கத்துடன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் 2 நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இருவரும் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர்.. இவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் அவர்களை சித்ரவதை செய்து கொன்றதாகவும் குற்றம்சாட்டி, சாத்தான்குளத்தில் பொதுமக்கள் நீதிகேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. "லாக்அப்' மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதேபோல எம்பி கனிமொழி, மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் மரணத்தில் சந்தேகம் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. தன்னுடைய ட்வீட்டில், "#CustodialDeath:சாத்தான்குளம் காவல்ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் & சில காவலர்கள் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பலி.. போலீசை எதிர்த்துப் பேசியதற்காக இந்தப் படுகொலை. கொரோனாவால் சாகக்கூடாதென கடையை மூடச் சொன்னவர்கள் இந்த #இரட்டைக்கொலையைச் செய்துள்ளனர்".

"சாத்தான்குளம் காவல்வதை, இரட்டைக்கொலை- தொடர்புடைய காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனே சிறைப்படுத்த வேண்டும். அவர்களைப் பணியிடைநீக்கம் செய்யவேண்டும்.பிணையில் விடாமலேயே வழக்கை விரைந்து நடத்திக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
தூத்துக்குடியில் ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன் விலை.. சீலா மீன் ரேட்டை பாருங்க! அம்மாடியோவ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications