தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன்
சென்னை: திருவான்மியூர் டு உத்தண்டி மேம்பாலத்தை ரூபாய் 1400 கோடி ரூபாயில் கட்ட வேண்டியதை ஒப்பந்ததாரர்களை மிரட்டி 2100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார். ஜனநாயகன் வெளியீடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி கூறினார்.. ராமதாஸ் நாளை தர்மபுரியில் தனது மருமகள் சௌமியாவுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி போக தெரியும் என குறிப்பிட்டார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் போட்டியிடும் சி. ஏழுமலையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்த அவர், போளூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சிலை அருகே பாஜக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அப்புறப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார்...

அப்போது பேசி அன்புணி, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எதிரான மிகப்பெரிய பேரலை உருவாகி உள்ள, இன்னும் பத்து தினங்களில் அது சுனாமியாக மாறும் எனவும், மக்களின் முழு ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது குறைந்தது 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் என்பது எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் உண்டான தேர்தல் எனவும், மோடி மீது ஏன் ஸ்டாலினுக்கு பயம் என கேள்வி எழுப்பினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கை இல்லை திராவிட மாடல் ஐந்தாண்டு கால ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை.. ஆனால் தற்போது திமுக 8,000 ரூபாய் டோக்கன் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு தனது அதிகாரம் செல்வாக்கும் குறையும் என்பதற்காக பிரிக்கப்படாமல் உள்ளது, ஹிட்லரை விட மோசமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளார்.
உத்தண்டி டு திருவான்மியூர் மேம்பாலம் 1400 கோடி ரூபாயில் கட்டப்பட்டு அதனை 2,100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தாரை மிரட்டுவதாக குற்றம் சாட்டிய அவர், மாவட்டத்தின் அமைச்சர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு வயது என மாற்றி மாற்றி வேட்பு மனுவில் குறிப்பிட்ட மோசடி செய்துள்ளது.
முதலமைச்சரின் கிச்சன் கேபினட்டில் நெருக்கமான அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, கே என் நேரு, செந்தில் பாலாஜி இவர்கள் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகள் பெண்களுக்கு எதிரான குற்றம், வேலை வாய்ப்பு இல்லா திண்டாட்டம், வருவாய்த்துறை, தூய்மை காவலர் மற்றும் அரசு அதிகாரி உள்ளிட்டவர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலையில் தான் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு குறித்தும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 100% போதைப்பொருள் மற்றும் கஞ்சாவால்தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 62,000 குழந்தைகள் மீது குற்றங்கள் நடைபெற்று உள்ளது. அதில் 27 ஆயிரம் குற்றங்கள் போக்சோ 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 38 பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் 44 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று உள்ளது. இதுதான் திமுகவின் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி கொடுங்கால் ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
ஜனநாயகம் திரைப்படம் தேர்தலுக்காக வேண்டுமென்று திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு ஜனநாயக நாடு என்றும் தேர்தல் என்பது அனைவருக்கும் பொதுவானது எனவே விஜய்க்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ராமதாஸ் நாளை தர்மபுரியில் தனது மருமகள் சௌமியாவுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி போக தெரியும் என்று கூறினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications