ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஸ்டெர்லைட் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா ஆவேசமாக கூறினார்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா கூறுகையில் இந்த தீர்ப்பு வேதனை அளிப்பதாக இருந்தாலும் அதிர்ச்சி தருவதாக இல்லை. அதற்கு காரணம் இப்படிதான் நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.

முடிவுக்கு
ஆனாலும் இன்றைக்கு அந்த தீர்ப்பை அவர்கள் வெளியிடும் போது அது மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும். பசுமைத் தீர்ப்பாயம் இரு வழிகளில் இந்த பிரச்சினையை அணுகியிருக்கலாம். ஒன்று காற்று மாசு, நீர் மாசு ஆகியவற்றில் ஏற்பட்ட விதிமீறலை பார்த்து தீர்ப்பாயம் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

வெளிப்பாடாக
இன்னொரு பராமரித்தல் பிரச்சினை. இந்த பிரச்சினையை அவர்கள் ஆய்வு செய்து நாம் சொல்லும் தீர்ப்பு முறையானதா என அவர்களாகவே சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். இதை நான் சொல்லக் கூடாதுதான். இருந்தாலும் மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக இதை நான் கூறுகிறேன்.

உச்சநீதிமன்றத்தில்
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்வதற்கும் இந்த தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை நாங்கள் கேள்விக்குறியாக்குவோம். உச்சநீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச் செல்வோம்.

நீதிமன்றம் இருக்கிறது
என்ஜிடியின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்களின் தீர்ப்பு இதுவல்ல. தூத்துக்குடி மக்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். சட்டரீதியான போராட்டத்தை முன்வைப்போம். மக்கள் இந்த தீர்ப்பை கேட்டு கொதி நிலையில் உள்ளனர். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் அரசு, நீதிமன்றம் இருக்கிறது என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications