சென்னை மெட்ரோ ரயில் நிலைய டோக்கன் இயந்திரங்களில் பழுது சரியானது! வழக்கம்போல் கட்டணம் வசூலிப்பு!
Recommended Video
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பல தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதேபோல் வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இயந்திரங்கள் பழுது
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் வழங்கும் இயந்திரங்கள் இன்று காலை முதலே தொழில்நுட்பக் கோளாறால் பழுதானது.

இயந்திரங்கள் பழுது
காலை 6 மணி முதல் இயந்திரங்களில் ஏற்பட்ட பாதிப்பால் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டது.

இலவசமாக பயணிக்க அனுமதி
சென்னை முழுக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

பயணிகள் மகிழ்ச்சி
காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்களில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தானியங்கி டிக்கெட் சேவை பழுதால் பயணச்சீட்டு வழங்க தாமதமான காரணத்தால் மெட்ரோ நிர்வாகம் இலவச பயணத்திற்கு அனுமதியளித்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிற்பகல் ஆகும்
இதனிடையே விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. பழுது பிற்பகலில் தான் சரி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பழுது சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications