ஒன்றரை பவுன் நகையா.. மதுரவாயலை திகைக்க வைத்த திருநங்கை.. வியந்து போன போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது திருநங்கைகள், திருநம்பிகள் பலர் பல்வேறு புதிய பணிகள், சிறுதொழில்களை நடத்த தொடங்கி உள்ளனர். தவறான வழிகாட்டுதல்களால் ஒரு சிலர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதில் முடங்கினாலும் பலர் அதில் இருந்து வெளியே வந்து பலர் பல சாதனைகளை படைக்க தொடங்கி உள்ளனர்.
உணவு கடைகள், டீ கடைகள் தொடங்கி பல சிறிய சிறிய கடைகள் நடத்துவது மட்டுமின்றி மருத்துவ துறை, போலீஸ் துறையிலும் கூட திருநங்கைகள் பலர் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

எப்படி?
இந்த நிலையில்தான் மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் ஒன்று அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரவாயல், சொக்கநாதன் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செல்விசந்தோஷம்(37). திருநங்கையான இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

திருநங்கை சென்னை
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலை சந்திப்பில் கீழே கிடந்த பிரேஸ்லெட்டை கண்டெடுத்தார். அந்த நகையை தேடி யாரும் வராததால் சுமார் 1 1/2 பவுன் மதிப்புள்ள நகையை கொண்டு மதுரவாயில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் ஒப்படைத்தார். ஆம் ஒன்றரை பவுன் நகை.

அபகரிக்கவில்லை
இந்த நகையை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக அதை எடுத்துக்கொண்டு நேரடியாக அப்போதே போலீஸ் நிலையம் சென்றுள்ளார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் அந்த நகைக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

பாராட்டு
அவரின் இந்த செயலை பார்த்து போலீசார் வியந்து போனார்கள். சாலையில் கிடந்த 1 1/2 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவரான திருநங்கையை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
அந்த திருநங்கை கொடுத்த நகை விரைவில் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்று போலீசார் தரப்பு உறுதி அளித்துள்ளது.
-
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications