சென்னையில் சினிமா நட்சத்திரங்கள், மாடலிங் அழகிகளை வைத்து அந்த தொழில்.. பிரபல இயக்குனரின் மனைவி கைது
சென்னை: சென்னை விருகம்பாக்கம் சாய்பாபா காலனியில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் மாடலிங் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பிரபல திரைப்பட இயக்குனரின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த மாடல் அழகியை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
சினிமாவில் நடிக்க விரும்பும் பெண்களை குறிவைத்து, நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் அவர்களை தள்ளியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இளம் அழகிகள் மற்றும் மாடலிங் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்தது.

அதிரடியாக சோதனை
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தியாகராய நகர் துணை கமிஷனர் அரிகரன் பிரசாத்திற்கு புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் வாடிக்கையாளர்கள் போல் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு வந்து சோதனை செய்தார்கள்.

மாடலிங் அழகி
அதில் திரைப்பட இயக்குநர் ஒருவரின் மனைவி காந்திமதி (40), மாடலிங் அழகிகள் மற்றும் சினிமா பிரபலங்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் இயக்குநர் மனைவி காந்திமதியை அதிரடியாக கைது செய்தார்கள். அவரிடம் இருந்து மாடலிங் அழகி ஒருவரையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஜோடியாக நடிக்கலாம்
கைது செய்யப்பட்ட காந்திமதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சினிமாவில் பெரிய நடிகைகளாக வரவேண்டும் என்ற ஆசையில் இயக்குநராக உள்ள தனது கணவரை சந்திக்க வரும் இளம் அழகிகள் மற்றும் மாடலிங் அழகிகளிடம், உங்களுக்கு பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறி தன் வசப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

ஒரு லட்சம் வரை பேரம்
மேலும், இளம் அழகிகளிடம் சினிமா ஆசைகாட்டி அவர்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தொழிலதிபர்களுக்கு அனுப்பி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பேரம் பேசி பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காத நடிகைகளையும் வைத்து அவர் தொழில் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

சிறையில் காந்திமதி
இதனிடையே கைதான இயக்குநர் மனைவி காந்திமதியை தனிப்படை போலீசார் விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். போலீசார் காந்திமதி மீது வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திரைப்பட இயக்குநர் மனைவி ஒருவர் பாலியல் தொழில் நடத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications