தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மொத்த வார்டுகள்
மொத்தம் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என 12, 838 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

மொத்த வேட்புமனுக்கள்
பிப்ரவரி 4-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநகராட்சிகளில் 1,374 வார்டுகளுக்கு போட்டியிட 14, 701 பேரும், நகராட்சியில் உள்ள 3,843 வார்டுகளுக்குப் போட்டியிட 23,354 பேரும் பேரூராட்சிகளில் 7,621 வார்டுகளுக்கு 36,361 பேரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்
இந்த வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்யும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. மேலும் இன்று மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. இந்த பட்டியல் வெளியான பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பணி நடைபெறும்.

களநிலவரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகள், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதிமுக அணியில் த.மா.க., புதியநீதி கட்சி, சமூக சமத்துவ படை ஆகியவை இணைந்துள்ளன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்டவை தனித்தும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான பிரசாரம் படுதீவிரமாக நடைபெற்றும் வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications