எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்.. இதுவரை பதில் இல்லை.. கொந்தளித்த நிதியமைச்சர் பிடிஆர்.. என்னாச்சு?
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் மத்திய அரசை விமர்சித்துள்ளார்
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்று வரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
பண மதிப்பு நீக்கம் "இந்திய நாணய பரிசோதனை குறித்த பார்வை" புத்தக வெளியீடு, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், பொருளாதார அறிஞரும் மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கறுப்பு பணம்
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயரஞ்சன், "கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற முடிவு பொருளாதார முடிவல்ல.. இது நிச்சயம் அரசியல் முடிவு தான்.. சாமானியர்களும், சாமானிய மக்களும் பணமதிப்பு நீக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.. அரசின் கொள்கைகளை கேள்வி கேட்பவர்கள், விமர்சிப்பவர்கள் இருக்கக் கூடாது என்று பல்வேறு முடிவுகள் பணமதிப்பிழப்பு காலத்தில் எடுக்கப்பட்டன" என்று திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்

திருக்குறள்
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.. ஆங்கிலத்தில் அவர் பேசினாலும், திருக்குறளை எடுத்து சொல்லி அதற்கான விளக்கத்தையும் பிடிஆர் விரிவாக கூறியிருந்தது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

விரிவான ஆய்வு
தொடர்ந்து அவர் பேசும்போது, "பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறான முன் உதாரணம்.. அரசு எடுத்த முடிவால் இன்று வரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. பொதுமக்கள் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எடுக்க கூடாது என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? இதை நான் ஏற்கனவே கேள்வி கேட்டேன்.. ஆனால், இன்று வரை இந்த கேள்விக்கு பதில் இல்லை.. வரி வசூல் தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய வேண்டும்" என்று தன்னுடைய உரையில் கேட்டுக் கொண்டார்.

கண்டனம்
பணமதிப்பு நீக்கம் குறித்து பிடிஆர் பலமுறை தன்னுடைய கண்டனத்தையும், அது சம்பந்தமான விளக்கத்தையும் தந்துள்ளார்.. ஒருமுறை இவர், "இந்திய வரலாற்றின் மிகமோசமான மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு பணமதிப்பிழப்பு. அதன் ஓராண்டு நிறைவையொட்டி 2 கட்டுரைகளை எழுதினேன்.. தன்னை கடவுளாக பாவித்த ஒரு மனிதனின் துக்ளக்கிய செயல்கள் இன்றும் நம்மை வதைக்கிறது. ஏழை எளியவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாகினர்" என்று பதிவிட்டிருந்த ட்வீட்டானது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தி இருந்தது.

பரபரபபு
அதுபோலவே ஜெயரஞ்சனும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும், தன்னுடைய டிவி விவாதங்களில் பலமுறை விரிவாக பேசி வந்துள்ளார்.. இந்நிலையில் இவர்கள் இருவருமே இன்று ஒன்று சேர்ந்து, நிகழ்த்திய உரை இன்றைய சூழலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications