"கவலைப்படாதீங்க".. தைரியம் தந்த முதல்வர்.. பிடிஆர் எடுத்த திடீர் முடிவு.. புது கொள்கை என்ன?
பிடிஆரை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பாஜக அண்ணாமலை
சென்னை: "நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு பதில் தருவேன்" என்று நிலவி வரும் தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிடிஆர் ஒரு அதிரடி முடிவை அறித்துள்ளார்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பங்கேற்காதது குறித்த விவாதங்கள் சமீபகாலமாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.. இதற்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டார்...
ஆனால் அதற்கும் சலசலப்பு கிளம்பியது.. ஒருபக்கம் பாஜகவின் அண்ணாமலையும் அதிமுகவில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சித்து மாறி மாறி பேட்டிகளை தந்து வந்தனர்.

சர்ச்சைகள்
அதேசமயம், பிடிஆர் அளித்து வரும் பேட்டிகளும் பரபரப்பை கிளப்பி விடுவதால் திமுகவில் ஒருவித தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. டிகேஎஸ் இளங்கோவன் குறித்து பிடிஆர் சொன்ன கருத்தை வைத்தே அவருக்கு செக் வைக்கவும் திமுகவுக்குள் சில முயற்சிகள் நடந்தது. ஆனால் திமுக மேலிடம் எதையுமே பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது..

நிதித்துறை
நிதித்துறையை பிடிஆரை போல ஒருவர் இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று மேலிடம் கருதுகிறது. உங்கள் வேலையை சரியாக பாருங்கள். யாரை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் பிடிஆருக்கு தைரியம் சொன்னதாக செய்திகளும் கசிந்தன... இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தந்த பேட்டியில் அதிரடி முடிவை பிடிஆர் அறிவித்துள்ளார்.

அண்ணாமலை
அதில், "முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதில் தர போவதில்லை.. அவர்கள் இருவரையும் முழுவதுமாக புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளேன்... இப்போதில் இருந்து, எனது நேரத்திற்கு மதிப்பில்லாதோருக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பது எனது கொள்கையாக மாறியிருக்கிறது. ஒரு நிதியமைச்சராக நான் செய்வதற்கு அவ்வளவு இருக்கிறது...

திமுக
அதனால் நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு பதில் தருவேன்.. ஒரு அரசியல்வாதியின் மிகப்பெரிய கடமை என்பது அரசுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கடினமானவற்றையும் எளிய வாக்காளர்களுக்குப் புரிய வைப்பதுதான்" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்... இதையடுத்து சமீப காலமாக நிலவி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை நிதியமைச்சர் பிடிஆர் எடுத்துள்ளார்.. இந்த முடிவு அதிமுக, பாஜகவுக்கு மட்டுமல்லாமல், திமுகவில் உள்ள சில சீனியர்களுக்கும் மறைமுக பதிலடியாக அமைந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications