மிச்சம் உள்ள ஆபரேஷன்.. பஹல்காம் தீவிரவாதிகள் பிடிக்கப்பட வேண்டும்.. இந்தியாவிடம் மீதம் உள்ள டாஸ்க்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானை இந்தியா தாக்கிவிட்டது.. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் அனைத்து படைகளையும் இந்தியா கதறவிட்டுவிட்டது. ஆனால் இந்தியாவிடம் ஒரு டாஸ்க் இன்னும் மீதம் உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை கடுமையாக மேற்கொண்டது. பாகிஸ்தான் இதில் கடுமையான சேதங்களை எதிர்கொண்டது. இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,

1.. நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
2. PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
3. ⁠PAF முரிட் விமான தளம், சக்வால்

அதேபோல் பாகிஸ்தானின் பிரைட்.. அதாவது பாகிஸ்தானின் பெருமை என்று அழைக்கப்பட்ட மிக முக்கியமான ஃபத்தா-1 ஏவுகணையை இந்தியா அடித்து காலி செய்துள்ளது.முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.

Finding and terminating Pahalgam Pakistan attackers are still an active operation for India

பாகிஸ்தானின் ராணுவ தலைநகர், அரசியல் தலைநகர், நிர்வாக தலைநகர் என்று அழைக்கப்படும் முக்கிய நகரங்களை இந்திய ஏவுகணைகள் அடித்து நொறுக்கி உள்ளது. இந்திய ராணுவம் சார்பாக டிரோன்கள் மட்டுமன்றி ஏவுகணைகளும் அடித்து வீழ்த்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இருதயம் போன்ற நகரம் ஆகும். அரசியல் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் அரசியலை நிர்ணயிப்பதே லாகூர்தான். லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோலம் ராவல்பிண்டியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் பகுதி ஆகும். பாகிஸ்தானின் மிக முக்கிய ராணுவ தளவாடம் ஆகும். இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்

ஆபரேஷன் வெற்றி

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத தளவாடங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' இன் கீழ் குறிவைக்கப்பட்டன. இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது.

குறிவைக்கப்பட்ட பஹாவல்பூர்

முக்கியமாக பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.

துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார்.

ஆனால் தீவிரவாதிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை

ஆனால் இந்தியாவிடம் ஒரு டாஸ்க் இன்னும் மீதம் உள்ளது. பஹல்காமில் இந்தியர்கள் 25 பேரை கொன்ற அந்த 4 தீவிரவாதிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை. பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பின் தீவிரவாதிகள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினர்.

பொதுவாக தீவிரவாத அமைப்பை தாக்கினாலும்.. இந்த குறிப்பிட்ட தாக்குதலில் ஈடுபட்ட அந்த 4 தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை. அவர்களையோ பிடிக்க வேண்டிய டாஸ்க் இன்னமும் இந்தியாவின் கைவசம் உள்ளது. வரும் நாட்களில் இந்தியா அதற்கான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+