பெண் பத்திரிக்கையாளர் புகார்! சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு
சென்னை: மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை, தேனி, சேலத்தை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் புகாரில் சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டராக இருப்பவர் சந்தியா ரவிசங்கர். இவர் சென்னை மாநகர குற்ற பிரிவில் புகார் அளித்தார். அதில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சவுக்கு சங்கர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்துள்ளனர். அதன்படி 294 பி (ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல்), 354டி (அனுமதியின்றி பின்தொடர்தல்), 506(1) (குற்றவியல் மிரட்டல்), 509 (பெண்ணை தவறான நோக்கத்தில் அவமதித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் பிரிவு 4 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி கோவை க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு தேனியில் அவரது காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா சிக்கியது தொடர்பாக கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு நேற்று இரவு சேலம் சைபர் க்ரைம் போலீசில் சவுக்கு சங்கர் மீது 3வது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெண் காவலர்கள் குறித்த அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பாக சேலம் சைபர் க்ரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரிலும் அவர் மீது வழக்குப்பதிவானது. இப்படி கோவை, தேனி, சேலத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தான் தற்போது சென்னை குற்றப்பிரிவு போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications