பைனலில் சிஎஸ்கே! கொண்டாட சென்னை நேப்பியர் பாலத்தில் நடந்த சூட்டிங்கால் சிக்கல்! பாய்ந்த வழக்கு
சென்னை: ஐபிஎல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை நேப்பியர் பாலத்தில் சூட்டிங்கால் சிக்கல் ஏற்பட்டதோடு, போலீசார் அதிரடியாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 6 அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

மாறாக குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் போட்டிக்கு முன்னேறின. பிளேஆப் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறியுள்ளன. சென்னை, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பைனலுக்கு சென்றுள்ளன. இந்த 2 அணிகளும் நாளை குஜராத் அகமதாபாத்தில் நடக்கும் இறுதி போட்டியில் மோத உள்ளன. இதில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
கடந்த முறை ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இந்த முறையும் கோப்பையை வெல்ல போராடும். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது. இதனால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் தான் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதை கொண்டாட்டம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதாவது சென்னை நேப்பியர் பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நேப்பியர் பாலத்தில் சிலர் சூட்டிங் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருகே சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்
அப்போது ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியதை கொண்டாடும் வகையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சூட்டிங் நடப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் அவர்களிடம் எந்த அனுமதி சான்றும் இல்லை. இது சட்டத்துக்கு விரோதமானது. இந்நிலையில் தான் உரிய அனுமதியின்றி சூட்டிங் நடத்தியதாக சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த விஜய்சேகர் மற்றும் மாதவரத்தை சேர்ந்த யோகேஷ் ஆகியோர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications