புரட்டி போட்ட சம்பவம்.. கண்ணே தெரியல.. தீயில் சிக்கிய நோயாளிகளை மீட்ட செய்தியாளர்கள்.. ராயல் சல்யூட்
செய்தியாளர்கள் சென்னை மருத்துவமனை தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொண்டவர்களை பத்திரிகையாளர்கள் சிலர் துணிந்து காப்பாற்றி உள்ளது, பாராட்டை பெற்று தந்து வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரை, 3 பெரிய டவர் பிளாக்குகள் உள்ளன.. இந்த டவர் பிளாக்குகளுக்கு பின்புறமாகத்தான் சிகிச்சை மேற்கொள்ளும் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன.
இதில் குறிப்பாக, கல்லீரல் சிகிச்சைக்கான கட்டிடத்துக்கு மட்டும் மொத்தம் 3 மாடிகள் உள்ளன.. இதில், தரைதளத்தில்தான் இன்று காலை திடீரென அந்த வெடிசத்தம் கேட்டது..

கட்டிடம்
கட்டிடம் முழுக்க தீ மளமளவென பரவி, மிகப்பெரிய விபத்தாக மாறியது.. மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் ரூமில்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.. இந்த தகவல் தெரிந்தததுமே உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க துவங்கினர்.. இதே கட்டிடத்தில்தான் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு ஐசிபூ வார்டும் இருப்பதால் பரபரப்பும் பீதியும் எகிறியது.

நோயாளிகள்
உள்ளே சிக்கியுள்ள நோயாளிகளை வெளியே கொண்டு வருவதற்கான பணிகள் துரிதமாக நடந்தன.. மற்றொருபக்கம் சென்னை குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் கொண்டுவரப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது.. ஆனால், தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டதினால், கரும்புகை சூழ்ந்து கொண்டு மேல்தளம்வரை பரவியது.. மருத்துவ உபகரணங்கள் வைக்கும் ரூமிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில், தீ பற்றியதாக கூறப்படுகிறது.. தீ கொளுந்துவிட்டு எரிவதால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது..

ஜன்னல்கள்
அதனால், இதனால், ஜன்னல்களை உடைத்து வீரர்கள் உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர்.. உள்ளே இருக்கும் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.. தகவலறிந்த மக்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.. தீயை முழுமையாக கட்டுப்படுத்திய பிறகுதான் இந்த விபத்துக்கான காரணம் சொல்லக்கூடும் என்கிறார்கள்...

10 சிலிண்டர்கள்
ஆனால், குடோனில் இருந்த 10 சிலிண்டர்களில் 3 சிலிண்டர்கள் வெடித்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், தீவிபத்தில் சிக்கி கொண்டிருந்த பல நோயாளிகளை, பத்திரிகையாளர்கள் சிலர் காப்பாற்றி உள்ளனர்.. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதுமே செய்தி சேகரிக்க சென்ற நிலையில், அங்கு கேட்ட மரண ஓலம், பத்திரிகையாளர்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. கரும்புகை எல்லா பக்கமும் சூழ்ந்து இருந்ததால், நோயாளிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு பத்திரிகையாளர்களும் சேர்ந்து உதவி உள்ளனர்..
Recommended Video

மரண ஓலம்
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், நோயாளிகளின் உயிரை மீட்டு வெளிக்கொணர்ந்துள்ளனர்.. கையில் ஒருபக்கம் கேமராவை பிடித்து கொண்டே, மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்களை கைத்தாங்கலாக அழைத்து வெளியே கொண்டு வர உதவினர்.. மேலும் சிலர், சிகிச்சையில் இருந்த நோயாளிகளை, சக்கர சக்கர நாற்காலிகளில் உட்கார வைத்தும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கும் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.. அதேபோல, வயதானவர்களை கையில் தூக்கி கொண்டே, வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர்.. தீவிபத்து கலவர காட்சியிக்கு நடுவே, பத்திரிகையாளர்களின் இந்த பணிகள் காண்போரின் கவனத்தை ஈர்க்க செய்தது.

மீடியாக்காரர்கள்
இந்த சம்பவம் என்றில்லை, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உலகம் கொரோனா தீவிரத்தின் கடினமான நேரத்திலும், பத்திரிகையாளர்களின் பணி அளப்பரியது.. உயிரையும் பொருட்படுத்தாமல், களத்தில் நின்று செய்திகளை தந்து கொண்டிருந்தனர்.. நோயிலிருந்து உயிர்க்காக்கும் மருத்துவர்களும், நோய் வராமல் தடுக்கும் தூய்மை பணியாளர்களும் உயர்த்தப்பட்ட அளவிற்கு மீடியாக்காரர்களை பல தரப்பினரும் மறந்தது ஏனோ தெரியவில்லை..

சபாஷ்
எனினும், களத்தில் பணியாற்றும் அனைத்து செய்தியாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. சமூக ஓழுக்கத்தை உயர்த்தி பிடித்து - மனித மதிப்பீடுகளை பாதுகாத்து - மனித குலத்தை முன்னோக்கிசெல்லும் துடுப்பாக பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருவது, நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.. இன்றைய தினம், தீ இருந்து குண்டுகட்டாக இன்றுவரை நீடித்து வருகிறது.. அந்த வகையில், இன்று நடத்தி காட்டிய தீரமிக்க செயல்பாடுகளுக்கும் ஒரு ராயல் சல்யூட்..!












Click it and Unblock the Notifications