அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து! சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கியது!
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 108 எண்ணுக்கு அழைப்பு மேற்கொள்வதில் சிக்கல் எழுந்திருக்கிறது.
சர்வர் அறை உள்ள கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயை அணைக்க 7 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை
பொதுமக்கள் தங்கள் தொலைபேசியில் இருந்து, '108' என்கிற என்னை அழைக்கும் போது, அந்த அழைப்பு உடனடியாக அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சேர்க்கும் வேலையை பிஎஸ்என்எல் செய்கிறது. 108 என்பது கட்டணமில்லா அவசர எண். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த எண்ணுக்கான தொலைத்தொடர்பு இணைப்புகளை அரசுடன் இணைந்து வழங்குகிறது. இந்த எண்ணை அழைக்கும் நபரின் செல்போனில் பேலன்ஸ் இல்லை என்றாலும் கூட, பிஎஸ்என்எல் நெட்வொர்க் வழியாக இந்த அழைப்பு 108 மையத்தை சென்றடையும்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, 108 கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான அழைப்புகளை கையாள, பிஎஸ்என்எல் அதிவேக தரைவழி இணைப்புகளை வழங்குகிறது.
BSNL ஏன் முக்கியம்?
108க்கு அழைப்பவர், ஜியோ, ஏர்டெல், வோடபோன் என எந்த நிறுவனத்தின் சிம் கார்டை வைத்திருந்தாலும், 108 நம்பருக்கு போன் செய்யும் போது அருகிலுள்ள பிஎஸ்என்எல் அல்லது அரசு அங்கீகரித்த டவர் மூலமாகத்தான் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த அழைப்பு இணைக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் 108 நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றன. எனவேதான் அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
BSNL நெட்வொர்க்கும் பாதிப்பு
அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைய சேவையும் இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மற்ற தனியார் நிறுவனங்கள் எல்லாம் 5ஜி சேவைலைய கொடுத்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் மிகவும் தாமதமாகத்தான் 4ஜி சேவையை அமல்படுத்தியது. இந்த 4ஜி சேவையும் மற்ற தனியார் நிறுவனத்தின் சேவையை போல வேகமாக இல்லை என்றும் பலரும் புலம்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் திடீரென இந்த சேவை பாதிக்கப்பட்டிருப்பது பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications