சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.. விமான சேவைகள் ரத்தா? பரபரப்பு!
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் நுழைவாயிலில் இன்று திடீரென புகை மண்டலம் ஏற்பட்டது. இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச புறப்பாடு பகுதியில் உள்ள ஊழியர் உணவகத்தில் தீப்பற்றியதன் காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. இதனால் எந்த விமானச் செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை. மின் கசிவு காரணமாக விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், "விமான சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்குகின்றன. எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை. பயணிகள் பாதுகாப்பு முதன்மையாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிலைமை உடனடியாக சரிசெய்யப்பட்டது.
இத்தகைய செய்திகளை வெளியிடுவதற்கு முன் தயவுசெய்து எங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதன் மூலம் பயணிகள் உண்மையான நிலவரத்தை அறிந்து தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications