சென்னை ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து.. 2.30 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 6 வண்டிகளில் வந்து தீயணைப்புப் படையினர், சுமார் 2.30 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து காரணமாக ஜன்னல் வழியாக கரும்புகைகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள கேண்டீனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில், தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 2.30 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் இருந்த தளவாடப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் எரிந்து சேதம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications