ஓடும் பஸ்ஸில் குபுகுபுவென பற்றிய தீ.. அலறி அடித்து உயிர் தப்பிய மாணவர்கள்.. சென்னை அருகே பரபரப்பு
சென்னை அருகே ஓடும் பேருந்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
சென்னை: நடுரோட்டில் காலேஜ் பஸ் குபுகுபுவென தீப்பிடித்து எரிவதை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் இயங்கி வருவது அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி. இது அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமத்தை சார்ந்தது என கூறப்படுகிறது. இந்த கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்ல தனியாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, காலேஜ் பஸ் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்ஸில் தீப்பிடித்து புகை வர தொடங்கியது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தினார்.
அதற்குள் பஸ்ஸூக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக பஸ்ஸில் இருந்து இறங்கி, உயிர் தப்பிவிட்டனர். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ விபத்து குறித்து உடனடியாக தாம்பரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடுரோட்டில் பஸ் தீ பிடித்து எரிவதை கண்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிதறி ஓடினார்கள். 2 வாகனங்களில் தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கின. ஆனாலும் பஸ் முழுவதுமாக எரிந்து கருகிவிட்டது.
நல்லவேளையாக, மாணவர்கள் உடனடியாக சுதாரித்து இறங்கிவிட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பரபரப்பு நிறைந்த சாலையில் பஸ் தீப்பிடித்து எரிவதால் ஜிஎஸ்டி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் டிராமிக்ஜாமும் ஏற்பட்டுள்ளதால், போலீசார் அதனை சீர்படுத்தி வருகிறார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications