சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விதவை" கோலத்தில் ஆறுமுகம்.. திகைத்த ஈரோடு.. "கனிமொழியம்மாவுக்கு ரொம்ப நன்றி": செல்லபாண்டியன் நறுக்

இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் பிரச்சாரத்தை துவக்கியது

Google Oneindia Tamil News

சென்னை: கரூர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவின் போது டாஸ்மாக்கில் அதிக வருமானம் ஈட்டியதற்காக பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கீழராஜ குலராமன் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார்.. மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவர்.

அதேபோல, தேர்தல் சமயங்களில் பெரிய பெரிய கட்சிகளுடன் மோதி களம் காண்பவர்.. அதன் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் இவர் எப்போதுமே கவலைப்பட்டவர் கிடையாது.

அதிக வசூல்.. டாஸ்மாக் வருமானத்தை பாராட்டி சான்று வழங்கிய கலெக்டர்.. கரூரில் வெடித்த சர்ச்சை அதிக வசூல்.. டாஸ்மாக் வருமானத்தை பாராட்டி சான்று வழங்கிய கலெக்டர்.. கரூரில் வெடித்த சர்ச்சை

 மறுவாழ்வு

மறுவாழ்வு

"கொள்கையில்லா கூட்டணியை எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம்... ஆனால், குவார்ட்டர் இல்லாத கூட்டத்தை எந்தக் கொம்பனாலும் கூட்ட முடியாது" என்று ஒவ்வொருமுறையும் முழங்கி வருபவர்.. அதேபோல, மது குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.5 ஆயிம் வழங்க வேண்டும், மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஒவ்வொரு முறை தேர்தல் சமயங்களிலும், தேர்தல் அறிவிப்புகளாக வெளியிட்டு வருபவர்.. அதுமட்டுமல்ல, அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன் என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சவால் விடுத்தவர்.

 காலி பாட்டில்கள்

காலி பாட்டில்கள்

இப்போதும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்குவதாக அறிவித்துள்ளது... அச்சங்கம் சார்பில் எம்.எஸ்.ஆறுமுகம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். வழக்கமாக, கையில் டெபாசிட் தொகை இல்லை என்றால், டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்து, அதன்மூலம் டெபாசிட் தொகுதியை செலுத்தி போட்டியிடுவார்கள்..

 மஞ்சள் தாலி

மஞ்சள் தாலி

அதேபோல மதுவால் பல குடும்பங்கள் நாசமாவதை சுட்டிக்காட்டும் விதமாக, வழக்கமாக எல்லா தேர்தல்களிலும் வேட்பாளர்கள் வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தில், கையில் மஞ்சள் தாலி கயிறுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.. அந்த வகையில், இந்த முறையும், இடைத்தேர்தல் நடக்க போகும் தொகுதியில், டாஸ்மாக் வாசலில் கிடந்த காலி பாட்டில்களை எல்லாம் ஆறுமுகம் பொறுக்கியெடுத்து, அதை காசாக்கி, டெபாசிட் தொகை கட்டினார்.. அதேபோல ஆறுமுகமும் விதவை கோலத்தில், கையில் தாலியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.. வெள்ளை புடவையில், தலைவிரி கோலத்தில் ஆறுமுகம் வந்ததை ஆச்சரியமாக பார்த்தனர்..

 கனிமொழியம்மா

கனிமொழியம்மா

இந்நிலையில், அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான், "திமுகதேர்தல் அறிக்கையில், மதுகடைகளை மூடுவோம்னு சொல்லவில்லை, குறைப்போம்னுதான் சொன்னோம் என மிகதெளிவாக சாத்தூர் திருமண நிகழ்ச்சியில் "வாழப்போகும்"அடுத்த சந்ததிகளுக்கும் புரியும் வகையில் தெளிவாக பேசியுள்ள கனிமொழியம்மாவுக்கு நன்றி.. டாஸ்மாக் மதுவால் பாதிக்கபட்டுள்ளகுடும்பங்களின், "நெஞ்சங்களில்" பாலைவார்த்தமைக்கு கோடானகோடி நன்றியினையும், தெரிவித்து கொள்கிறோம்.

 விதவை பெண்கள்

விதவை பெண்கள்

கரூர்மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையில் சாதனைபடைத்தவர்களுக்கு "சான்றிதழ்" வழங்கி திரும்ப பெற்றாலும், மற்ற 37 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனையில் சாதித்தவர்களுக்கு கொடுக்கபட்ட "சான்றிதழை""பற்றி பேசாததற்கும் கோடான கோடி நன்றியினை தெரிவிக்கிறது தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வுசங்கம். டாஸ்மாக் விற்பனையில், "சாதித்தவர்களுக்கு" சான்றிதழ் வழங்கியதுபோல, டாஸ்மாக்கால் புருஷனை இழந்த "விதவைகளான பெண்கள்" சான்றிதழ் கிராமம்தோறும் வழங்கினால் மக்களுக்கு பெரும் உதவியாகயிருக்குமென தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வுசங்கம் பணிவுடன்வேண்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
First Candidate Arumugam announced by liquor awareness society and contest in the by election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X