Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சக்சஸ்!... முதல் கல்லீரல் மாற்று.. ரூ 35 லட்சம் அறுவை சிகிச்சையை இலவசமாகச் செய்த அரசு மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கல்வியும் மருத்துவம்தான் நமது இரு கண்கள்' என்று எல்லா மேடைகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கொரோனா தொற்று உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருந்த வேளையில், அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க பெரும் துணையாக இருந்தது அரசுப் பொது மருத்துவமனைகள்தான்.

உலக நாடுகளில் நம்மிடம் இருப்பதைப் போல பொது மருத்துவமனைக் கட்டமைப்பு இல்லை என்பதால்தான், கொள்ளை நோய் பெரிய அளவில் பரவியது எனப் பல மருத்துவ நிபுணர்கள் இன்றைக்குக் கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சொல்லப் போனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களை விடவும் மருத்துவக் கட்டுமானம் தரமாக இருப்பது தமிழ்நாட்டில்தான்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு:

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு:

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1800 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளன. 8700 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள் 420 உள்ளன.

இவற்றைத் தவிர நகர ஆரம்பச் சுகாதார நிலையங்கள் 461 உள்ளன. மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 18 உள்ளன. தாலுக்கா மருத்துவமனைகள் 272 உள்ளன. இதற்கும் மேலாக அரசே நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் 36 உள்ளன.

இவற்றுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் மட்டும் 62 உள்ளன. வேறு எந்த மாநிலத்தில் இல்லாத சாதனைகள் இவை. இதற்கும் மேலாக ஒரு மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையைச் சென்னையில் வைத்துள்ளோம்.

ஆக, மருத்துவத்தில் தமிழ்நாடு பெரியளவில் முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரத்தில் உள்ளனர். அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 149 மருத்துவர்கள் என்பது சரியான புள்ளிவிவரம். இப்போது உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையின் படி 1லட்சத்து 49 ஆயிரம் பேர் என்ற அளவில் கூடுதலாகவே மருத்துவர்கள் உள்ளனர்.

இந்தளவுக்கு முன்னேறி இருந்தும் இன்னும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு. அதற்குச் சரியான சான்றுகள் பல உள்ளன.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்ற ஏற்றமிகு ஏழு திட்டங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ. 1,136.32 கோடியில் 44 புதிய மருத்துவமனைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

இது தமிழ்நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேலும் வலுப்பெற வைக்கும் செயல். இதன் மூலம் வருங்காலத்தில் மருத்துவ தலை நகரமாக இந்திய அளவில் தமிழ்நாடு திகழப் போகிறது.

வருங்காலத்தில்தானே? எனச் சிலர் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பாக 50 வருடக்கால வரலாற்றில் இல்லாத சாதனையைத் தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

முதல் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை

முதல் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை

முதன்முறையாக ஈரோட்டைச் சேர்ந்த மணி என்ற நோயாளிக்குக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிக்கு சுமார் 52 வயது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்தத் துறையை உருவாக்கி 50 ஆண்டுகள் முடிந்துள்ளது. இத்தனை வருடங்கள் கடந்த பிறகு மருத்துவர்கள், முதன்முறையாகக் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சையைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளனர்.

இவருக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து 17 நாள்கள் கடந்துள்ள நிலையில், நோயாளி யாருடைய உதவியும் இன்றி எழுந்து நடமாட ஆரம்பித்துள்ளார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

இதே அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரலைத்தான் மணிக்கு மருத்துவர்கள் மாற்றி வைத்துள்ளனர். மேலும் ஒருவரும் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது உடல் உறுப்புகளையும் அவரது உறவினர்கள் தானம் செய்ய முன்வந்துள்ளார்கள்.

இந்தக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்து கொள்ள சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், இவ்வளவு தொகை செலவாகக் கூடிய இந்தச் சிகிச்சையைத் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக இலவசமாகச் செய்துள்ளனர்.

போண்டா மணியைக் காப்பாற்றிய அரசு:

போண்டா மணியைக் காப்பாற்றிய அரசு:

இந்தத் திட்டத்தை முதன்முதலாக 2008இல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் தொடங்கி வைத்தார். அன்றுமுதல் இந்திய அளவில் இத்திட்டம் முன்னோடியாக விளங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் உடல் உறுப்பு தான சிகிச்சையில் தமிழ்நாடு 2வது இடத்திலிருந்து வருகிறது.

நடிகர் போண்டா மணி, தனது சிறுநீரகம் செயலிழந்துபோய் தவித்த போதும் அரசு மருத்துவமனைதான் அவரது உயிர்பிழைக்க வைத்தது. இவரைப்போல் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10% மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை முன்மாதிரியாக ஏற்றுப் பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தச் சிறுநீரக நோயாளிகளைக் காப்பாற்ற அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே டயாலிசிஸ் செய்யும் வசதியைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல்வேறு தரப்பு மக்கள் உள்நோயாளிகளாக இருந்து பலன்பெற்று வருகின்றனர்.

இது குறித்து அரசு மருத்துவர் ரவிக்குமார், "நீரிழிவு நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிந்தால் மட்டும் போதாது, முறையாகக் கட்டுப்படுத்த வேண்டும். அதனுடன் உயர் ரத்த அழுத்தத்தையும் நாம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தினந்தோறும் முக்கியம். அதேபோன்று நடைப்பயிற்சி அவசியம். உணவுக்கட்டுப்பாடு அதைவிட முக்கியம். வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் உட்கொள்ளக் கூடாது" என்கிறார்.

குறிப்பாக அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் 24 மணிநேரமும் டயாலிசிஸ் செய்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இங்கே செய்யப்படும் டயாலிசிஸ் செய்யக் கட்டணங்களை வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு 3500 முதல் 3700 பேர் டயாலிசிஸ்:

ஒரு மாதத்திற்கு 3500 முதல் 3700 பேர் டயாலிசிஸ்:

இவை இல்லாமல் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவில் செயல்பட்டுவரும் தலைமை மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் முறை இலவசமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு அனைத்து மருத்துவமனைகளையும் சேர்த்துக் கிட்டத்தட்ட 70க்கும் மேலான டயாலிசிஸ் கருவிகள் உள்ளன.

ஒரு மாதத்திற்கு 3500 முதல் 3700 என்ற அளவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகின்றன. ஒருநாள் எனப் பார்த்தால் குறைந்தபட்சம் 100 முதல் அதிகபட்சமாக 150 என்ற அளவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த டயாலிசிஸ் அரசு விடுமுறை நாள்களிலும் இயங்கி வருகின்றது என்பது மிகமிக முக்கியமான செய்தி.

"நான் கடந்த எட்டு மாதங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த 8 மாதங்களாக மிகச் சிறப்பான சிகிச்சையை எனக்குச் செய்துள்ளார்கள். நாளை எனக்குச் சிறுநீரக அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளது. இந்தளவுக்கு எனக்கு உரிய வைத்தியம் செய்ய வசதிகளைச் செய்து தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" என்கிறார் ஓசூரைச் சேர்ந்த சிறுநீரக நோயாளி மாதேஷ்.

"கடந்த ஒரு வடங்களாக டயாலிசிஸ் செய்ய அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். மருத்துவர்களின் அன்பாக இருக்கிறது. யாரும் எங்களை வெறுப்பதில்லை" என்கிறார் சூளைமேட்டிலிருந்து வந்து சிகிச்சை பெற்று வரும் பத்மநாபன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+