சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்.. பிறகு பார்க்கலாம்.. ரஜினி பற்றி கனிமொழி சொன்ன கருத்து!

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் அதன்பின் அவரின் கருத்துக்களை விமர்சிக்கலாம் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    படுகொலையில் நியாயம் வேண்டும்... கனிமொழி வலியுறுத்தல்...

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் அதன்பின் அவரின் கருத்துக்களை விமர்சிக்கலாம் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

    நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள்.

    First, Rajinikanth has to start a party says Kanimozhi

    காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும், என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழியிடம் கருத்து கேட்கப்பட்டது.

    முதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி! முதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி!

    இதையடுத்து கனிமொழி அளித்த பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. அவருடைய கருத்துக்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். இப்போது அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    கட்சி தொடங்கிய பின் அவர் கூறும் விஷயங்களுக்கு கருத்து கூறலாம். பாஜக மும்மொழி கொள்கை என்று மக்கள் மீது மொழியை திணிக்க பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் அவர்களுக்கு பிடித்த மொழியை தேவைப்பட்டால் கற்பார்கள், என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    First, Rajinikanth has to start a party says DMK MP Kanimozhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X